சினிமா

‘சிறைச்சாலை’க்குப் பின் மோகன்லாலுடன் பிரபு: கலைப்புலி எஸ். தாணுவின் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’

இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1996–ம் ஆண்டு வெளியான படம் தான் காலாபானி. மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபு நடித்த முதல் மலையாளப் படமும் அதுதான்.

இப்படத்தை தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்டார். தற்போது காலாபானி வெளியாகி 25 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் மீண்டும் மோகன்லாலும், பிரபுவும் மலையாள படமான “மரைக்கார் அரவிபிக்கடலிண்டே சிம்ஹம்” படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தையும் பிரியதர்ஷனே இயக்குகிறார். தமிழில் இப்படம் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் எனும் பெயரில் இம்மாதம் 26–ம் தேதி தமிழகமெங்கும் வி. கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு பிரமாண்டமாக வெளியிடுகிறார் . மேலும் இத்திரைப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேனு , அசோக் செல்வன்,பைசால் , சித்திக் . சுரேஷ் கிருஷ்ணா , போன்ற நட்சத்திரப்பட்டாளமே நடிக்கிறார்கள்.

திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார், எம்.எஸ். ஐயப்பன் நாயர் படத்தொகுப்பினை கவனிக்கிறார். ரோனி நபேல் இசையமைக்கிறார்.

தயாரிப்பு – ஆசிர்வாத் சினிமாஸ் (ஆண்டனி பெரும்பவூர்), இணை தயாரிப்பு – டாக்டர் ராய், சந்தோஷ் டி. குருவில்லா,

தயாரிப்பு வடிவமைப்பு – சாபு சிரில், வசனம் – ஆர்.பி. பாலா, நிர்வாக தயாரிப்பு – சுரேஷ் பாலாஜி ,ஜார்ஜ் டயல், மக்கள் தொடர்பு: ரியாஸ் அகமது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *