நாடும் நடப்பும்

காஞ்சீபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பூக்கடை ஆர்.டி.சேகர் மணி விழா

காஞ்சீபுரம், டிச.28–-

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது நல்வாழ்த்துக்களுடன் காஞ்சீபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், மாநில டான்சில்க் தலைவரும், சி.வி.எம். அண்ணாமலை கூட்டுறவு சங்க தலைவரும், முன்னாள் நகரமன்ற தலைவருமான பூக்கடை ஆர்.டி.சேகர், அவரது துணைவியார் கற்பகா பாலிடெக்னிக் இயக்குநர் எஸ்.ஜோதி ஆகியோரின் மணிவிழா பெரிய காஞ்சீபுரம் பூக்கடை சத்திரம் அருகே உள்ள பத்மாவதி பெருமாள் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் காஞ்சீபுரம் மாவட்ட கழக செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர்கள் மைதிலிதிருநாவுக்கரசு, வாலாஜாபாத் பா.கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சீ பன்னீர்செல்வம், காஞ்சீபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், மதுராந்தகம் கூட்டுறவு வங்கி தலைவர் சித்தப்பாகிருஷ்ணன், மாநில பட்டு இணைய இயக்குநர் ராஜபாளையம் கே.மணிகண்டன், பெரிய காஞ்சீபுரம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.பாலாஜி, அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் கே.யு.எஸ்.சோமசுந்தரம், வீ.வள்ளிநாயகம், தும்பவம் டி.ஜீவானந்தம், ஏ.செல்வராஜ், என்.பி.ஸ்டாலின், வி.ஆர்.மணிவண்ணன், மா.கிருஷ்ணன், கே.மனோகரன், கோல்ட் ரவி, வி.ஆர்.பெருமாள், ஆர்.டி.பெருமாள், என்.ஜெயக்குமார் சுமதி, ஜி.அருள்,ஆர்.டி.எஸ்.கலையரசி, கே.பழனி, கௌதமி, லோகநாதன்கௌசல்யா, பன்னீர்செல்வம், சாந்தி, சுந்தரம், அனுசியா, யுவராஜ், மகேஸ்வரி, எஸ்.பாலாஜி, ஆர்.டி.பி.அரிகிருஷ்ணன், கவிஞர்கள் கூரம் துரை, எஸ்.முருகவேள், பட்டு கூட்டுறவு சங்க தலைவர்கள் ஜி.விஸ்வநாதன், ஏ.கேசவன், யுவராஜ் என்கிற துரை, கே.வாசு, ராதாகிருஷ்ணன் உள்பட திரளானோர் கலந்து கொண்டு ஆர்.டி.சேகர்–எஸ்.ஜோதியை மனதார வாழ்த்தினார்கள்.

வந்திருந்த அனைவருக்கும் காலை மற்றும் மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

அப்போது மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பூக்கடை ஆர்.டி.சேகர் பேசுகையில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அம்மா வழியில் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர். வரும் பொங்கல் திருநாளில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரொக்கப்பணம் ரூ.2500 மற்றும் பொங்கல் தொகுப்பு பரிசுகளை வழங்க உத்தரவிட்டார். அதையொட்டி, தமிழக மக்கள் அனைவரும் முதல்வரையும், துணை முதல்வரையும் வாழ்த்தி, இந்த ஆட்சி அம்மா கூறியது போல் பல்லாண்டுகள் நிலைத்திருக்கும் என்று கூறினார்கள். 2021-ம் ஆண்டு தேர்தலில் அண்ணா தி.மு.க. அமோக வெற்றி பெற்று எடப்பாடி கே.பழனிசாமி முதல்வர் ஆவது உறுதி என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *