சினிமா

விஜய் நடிக்கும் 64வது படம் பூஜையுடன் துவங்கியது: ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குனர்

Spread the love

சென்னை, அக். 3–

தளபதி விஜய் நடிப்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 64’ இன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.

விஜய் நடிப்பில் வெளிவந்த செந்தூரப்பாண்டி, தேவா , ரசிகன் ஆகிய 3 படங்களை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். தற்போது 4வது முறையாக XB பிலிம் கிரியேட்டர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தளபதி விஜயின் 64 வது படத்தை தயாரிக்கிறார் . இந்தப் படத்தை மாநகரம் , கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

‘‘ராக்ஸ்டார்’’ அனிரூத், கத்தி திரைப்படத்திற்கு பிறகு 2வது முறையாக தளபதி விஜயுடன் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.பிலோமின் ராஜ் படத்தொகுப்பினை கவனிக்கிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் .

விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முதன்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. அடுத்த ஆண்டு (+) கோடையில் திரைக்கு வரவிருக்கிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *