செய்திகள்

தாம்பரம் வணிக வரி அலுவலர் காலனியில் பொங்கல் விழா

Spread the love

சென்னை, ஜன. 14–

மேற்கு தாம்பரம் லட்சுமி நகரில் அமைந்துள்ள வணிக வரி அலுவலர் காலனியில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பெண்களுக்கு கோலப்போட்டி நடைபெற்றது. உஷா அய்யப்பன் தலைமையில் மகளிர் பொங்கலிட்டனர்.

ஆண்கள், பெண்கள் இருபாலர்களுக்குமான உறி அடித்தல் குழந்தைகளுக்கான பேச்சு போட்டியுடன் தாம்பரம் மெக்கானிக் சேகரின் பல குரல் நிகழ்ச்சி, மாகாளியின் ருத்திரதாண்டவம், ஆவடி மறத்தமிழன் குழுவினரின் சிலம்பாட்டம், தப்பாட்டம், ஒயில் ஆட்டம், மயில் ஆட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் எழில் மாண்டிச்சேரி பள்ளி ஆர்.நடராஜ தொண்டைமான் திறந்தவெளி அரங்கத்தில் நடைபெற்றது. பொங்கல் விழாவிற்கு தலைமைச் செயலக இணைச் செயலர் கோவிந்தசாமி, தலைமை தாங்கி பரிசுகள் வழங்கினார்.

காலனி நலச்சங்க தலைவர் கதிர், என். குமாரவேலு, சங்க செயலர் ஜி.ராஜேஷ், எம்.அய்யப்பன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் என்.கரிகாலன், எஸ்.செல்லமுத்து, பிஆர்ஒ ஓய்வு மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு விழா சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *