செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் பிரமாண்ட பொங்கல் விழா

மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில்

ஆர்.கே.நகர் தொகுதியில் பிரமாண்ட பொங்கல் விழா

அவைத்தலைவர் மதுசூதனன், ஜே.சி.டி.பிரபாகர், எம்.எல்.ஏக்கள் விருகை ரவி, தி.நகர் சத்தியா பங்கேற்பு

சென்னை ஜன.12–

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அண்ணா தி.மு.க சார்பில் ஆர்.கே.நகர் பகுதி கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக அண்ணா தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், மண்டல தேர்தல் பொறுப்பாளர் ஜே.சி.டி.பிரபாகர், சட்டமன்ற உறுப்பினர்கள் தி.நகர். சத்தியா, விருகை வி.என். ரவி, மற்றும் இராயபுரம் ஆர்.மனோ, ஆகியோர் பங்கேற்று சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்தனர்.

முன்னதாக தண்டையார்பேட்டை மணிக்கூண்டில் இருந்து கொருக்குப்பேட்டையில் நடைபெற்ற விழா மேடைக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், தி.நகர் சத்தியா, ஆகியோர் ரேக்ளா வண்டியில் வந்து பொது மக்களை உற்சாக படுத்தினார்.

விழாவில் பொங்கல் பானைகளுடன் 500 பேர் பங்கேற்று கரும்பு, மற்றும் வாழை தோரணங்களுடன் அலங்கரிக்கப்பட்ட மஞ்சள் பூசிய பானைகளில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விட்டு அதில் பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, நெய்யுடன் வேக வைத்து பொங்கிய பானைகளை பார்த்த பொது மக்கள் பொங்கலோ, பொங்கல், என கர ஒலி எழுப்பி கிராமிய கலைநயத்துடன் உற்சாகத்துடன் சமத்துவ பொங்கலை கொண்டாடினர். பொங்கல் வைப்பதற்கு அரிசி, வெல்லம், முந்திரி உட்பட அனைத்து பொருட்களும் மற்றும் ஒவ்வொருவருக்கும் 3 கரும்புகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

இதனைத்தொடந்து வரவேற்பு முகப்பில் வாழைமரம், கரும்பு தோரணம் கட்டப்பட்டிருந்தது. குழந்தைகள் விளையாடும் ரங்க ராட்டினம், கிளி ஆரூடம், பஞ்சு மிட்டாய், ரிங் விளையாட்டு, துப்பாக்கி சுடுதல், என ஸ்டால் அமைக்கப்பட்டு கிராம சந்தை அமைக்கப்பட்டிருந்தது.

கோலப்போட்டி

மானாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், உரியாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம், மேடை கச்சேரி, பாட்டு போட்டி, கோலப் போட்டி, என பல்வேறு போட்டிகளுடன் கொருக்குப்பேட்டை பகுதியில் விழாக்கோலம் பூண்டது. தாரை தப்பட்டை செண்டை மேளம் முழங்க எழுச்சியுடன் விழா நடந்தது. நிகழ்ச்சியில் அனைவருக்கும் உணவுகள் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது

விழாவில் மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன், ஆர்.கே.நகர் பகுதி கழக செயலாளர்கள் ஆர்.எஸ். ஜெனார்தனம், ஆர்.நித்தியானந்தம், எம்.என். சீனிவாசபாலாஜி, பெரம்பூர் பகுதி கழக செயலாளர்கள் என்.எம்.பாஸ்கரன், வியாசை எம்.இளங்கோவன், மற்றும் ஆர்.கே.நகர், பெரம்பூர் பகுதி வட்ட செயலாளர்கள், மாவட்ட, பகுதி, வட்ட, பிற அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *