போஸ்டர் செய்தி

குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு

Spread the love

பஞ்சாப், நவ. 9–

பஞ்சாப் மாநிலம் குருத்வாராவில் பிரதமர் மோடி இன்று வழிபாடு நடத்தினார்.

டெல்லியில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு இன்று காலை சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.

அதன்பின் அங்கிருந்து சுல்தான்பூர் லோதிக்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள பீர் சாகிப் குருத்துவாராவில் வழிபாடு நடத்தினார். அங்கு சீக்கியர்களின் பாரம்பரிய முறையில் வழிபாடு நடத்தினார்.

இதனையடுத்து கர்த்தார்பூர் சாலையை இன்று மோடி திறந்து வைத்தார்.

சீக்கிய மதகுருவான குருநானக்கின் 550வது பிறந்த தின ஆண்டை முன்னிட்டு

பஞ்சாபில் உள்ள தேரா பாபா நானக் சாகிப் குருத்துவாராவையும், பாகிஸ்தானின் கர்த்தார்ப்பூரில் உள்ள குருத்துவாரா தர்பார் சாகிப்பையும் இணைக்கும் வகையில் ஒரு சாலை அமைக்கப்பட்டு இரு நாட்டு எல்லையில் பொதுவான சோதனைச்சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலையினை குர்தாஸ்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், மறுமுனையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் துவக்கி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *