திட்டமிடப்படாத திடீர் பயணமாக
டெல்லி குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு
புதுடெல்லி, டிச.20–
பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் உள்ள ரகாப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்கு இன்று திடீரென சென்றார். அங்கு அவரை குருத்வாரா நிர்வாகிகள் வரவேற்றனர். குருத்வாராவிற்குள் சென்ற மோடி அங்கு வழிபாடு நடத்தியதுடன், குரு தேஜ் பகதூருக்கு அஞ்சலி செலுத்தினார்.
திட்டமிடப்படாத திடீர் பயணம் என்பதால் மோடி குருத்வாராவுக்கு சென்றபோது, அதிகப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. போக்குவரத்தும் நிறுத்தப்படவில்லை. சாமான்ய மக்களின் நடமாட்டத்திற்கும் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை
குருத்வாராவில் வழிபட்ட பிரதமர் மோடி, அங்கிருந்த சீக்கிய பக்தர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
இது தொடர்பான புகைப்படங்களை பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘வரலாற்று சிறப்பு மிக்க ரகாப் கஞ்ச் சாகிப் குருத்வாராவில் இன்று வழிபாடு நடத்தினேன். ஆசிர்வதிக்கப்பட்டவன் போல் உணர்கிறேன். குரு தேஜ் பகதூரின் கருணையால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கானோரில் நானும் ஒருவன்’ என தெரிவித்துள்ளார்.