செய்திகள்

‘பிளாட்பாரம் டிக்கெட்’ கட்டண உயர்வு தற்காலிகமானது: ரெயில்வே விளக்கம்

புதுடெல்லி, மார்ச்.6-

கொரோனா காலத்தில் கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில் சில

ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது தற்காலிகமானது என ரெயில்வே துறை விளக்கம் அளித்திருக்கிறது.

அதிக கூட்டம் காணப்படும் குறிப்பிட்ட சில ரெயில் நிலையங்களில் மட்டும் இது அமல்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக, மும்பை கோட்டத்தில் உள்ள 78 ரெயில் நிலையங்களில் 7 ரெயில் நிலையங்களில் மட்டும் பிளாட்பாரம் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

பிளாட்பாரம் கட்டணத்தை உயர்த்துவதற்கான அதிகாரம், கடந்த 2015-ம் ஆண்டு முதல் அந்தந்த கோட்ட ரெயில்வே மேலாளர்களுக்கே வழங்கப்பட்டிருக்கிறது. குறுகிய காலத்துக்கு பிளாட்பாரம் கட்டணத்தை உயர்த்தும் நடைமுறை புதிதல்ல, அது ஏற்கனவே பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கிறது என்று ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *