செய்திகள்

பிளாஸ்டிக் பாட்டிலைக் கொண்டு பிளாஸ்டிக் மறு சுழற்சிக்கு முதல்வர் எடப்பாடி நடவடிக்கை ஆய்வுக் கூட்டத்தில் சி.பொன்னையன் விளக்கம்

சென்னை, அக். 17

நெகிழி மூலம் தக்க வைக்கும் சுவர், கழிவுகளைப் பிரித்தல் மற்றும் அதன் மூலம் வருமானத்தை உருவாக்குதல், நெகிழி மூலம் சாலைகளை உருவாக்குதல், நெகிழி கழிவு மேலாண்மையில் பங்கு, தயாரிப்பாளர்களின் பதிவு, இறக்குமதியாளர், நெகிழி பொருட்களுக்கான உரிமையாளர் ஆகியவை குறித்த செயல்பாடுகளின் மதிப்பீட்டாய்வு குழுக்கூட்டம் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் சி. பொன்னையன் தலைமையில் நடைபெற்றது.

சி.பொன்னையன் திருச்சி, கோவை மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் பயன்படுத்தப்பட்ட நெகிழி புட்டிக்களைக் (பிளாஸ்டிக் பாட்டில்) கொண்டு நெகிழியை மறுசுழற்சி செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை விவரித்தார்.

பயன்படுத்தப்பட்ட நெகிழி புட்டிக்களைச் சேகரித்து மறுசுழற்சி செய்வதற்கான நகரத்தின் முதல் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் டிராப் அண்டு டிரா திருச்சி மாநகராட்சி மூலம் ரூ.1.8 லட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுபோன்ற இயந்திரங்கள் கோயம்புத்தூர் பேருந்து நிலையத்திலும், ஈரோடு ரெயில் நிலையங்களிலும் நிறுவப்பட்டுள்ளது. இவ்வகையான இயந்திரங்கள், பயன்படுத்தப்பட்ட நெகிழி புட்டிகளை ஏற்றுக்கொண்டு அதற்கு மாறாக ஒரு கோப்பை குடிநீர் அல்லது இலவசமாக அலைபேசியில் சார்ஜ் ஏற்ற பயன்படுகிறது.

கருத்தரங்கின் முடிவுரையில் சி.பொன்னையன், நீடித்த நிலைத்த வளர்ச்சியின் இலக்கினை 2030-ற்குள் அடைய துறைகளின் மத்தியில் ஒருங்கிணைப்பும் மக்களின் பங்கேற்பும் மிக முக்கியம் எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் பி. துரைராசு, அரசு கூடுதல் தலைமைசெயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன், கூடுதல் தலைமைசெயலாளர் (சுற்றுச்சூழல்) சந்தீப் சக்சேனா, குழுமத் தலைவர் (நிலப் பயன்பாடு) அர்ச்சனா கல்யாணி, திட்ட இயக்குநர் (சிறப்புப் பகுதி மேம்பாட்டுதிட்டம்) சரயு, துறைசார்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் கலந்துகொண்டு பொன்னையன் தந்த விளக்கத்தைப் பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *