வாழ்வியல்

பாஸ்பரஸ் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?–1

Spread the love

உடல் ஆரோக்கியத்திற்கு பாஸ்பரஸ் மிகவும் அத்தியாவசியமான ஒரு கனிமச்சத்து. கால்சியத்தைப் போன்று பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று. வழக்கமாக இச்சத்து நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் இருந்தே கிடைக்கும்.

இருப்பினும் ஒருவரது உடலில் தேவையான அளவுக்கு குறைவாக இருந்தால், பாஸ்பரஸ் குறைபாடு ஏற்படக்கூடும். இப்பிரச்சனை மரபணு சிக்கல்களான சர்க்கரை நோய், வாழ்க்கை முறை பழக்கங்களான மது அருந்துதல், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றாலும் பாஸ்பரஸ் குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு. இந்த குறைபாடு உங்களுக்கு பெரிய பிரச்சனையாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் நீண்ட காலமாக இந்த குறைபாடு இருந்தால், அது உடலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

குறைபாட்டு அறிகுறிகள்

எலும்புகளில் 85 சதவீதம் பாஸ்பரஸ் காணப்படுகிறது. இச்சத்து குறைபாடு எலும்பு ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் பெரும்பாலான அறிகுறிகள் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளான மூட்டு வலி மற்றும் எலும்பு உடைதல் ஏற்படும்.

* மூட்டு விறைப்பு

* பலவீனமான எலும்புகள்

* களைப்பு

* பதற்றம்

* உணர்வின்மை

* எரிச்சலூட்டும் தன்மை

* உடல் எடையில் ஏற்ற இறக்கங்கள்

* சுவாசிப்பதில் சிரமம்

* ஈறுகளில் இரத்தக்கசிவு மற்றும் பல் வலி

* குழந்தைகளுக்கு இக்குறைபாடு இருந்தால், அவர்களின் வளர்ச்சி தாமதமாக இருப்பதோடு, பேசுவதில் பிரச்சனைகளும் இருக்கும்.

பரம்பரை கோளாறுகள்

பெரும்பாலான நேரங்களில், மரபணு பிரச்சனைகளால் பாஸ்பரஸ் சத்தை, உடலின் உறிஞ்சும் திறன் மற்றும் தக்க வைக்கும் திறன் பாதிக்கப்பட்டு, பாஸ்பரஸ் குறைபாடு ஏற்படும். இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு, அன்றாடம் கிடைக்கும் பாஸ்பரஸ், சிறுநீரின் வழியே உடலில் இருந்து வெளியேறும்.

பட்டினி கிடப்பதால் இந்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாக இருக்கிறது. அதேபோல், சத்தான உணவை உட்கொள்ளாமல் இருந்தாலும் ஏற்படக்கூடும். எப்போது உடலில் தாதுக்களின் பற்றாக்குறை இருக்கிறதோ, அப்போது உடல் தாதுக்களை மருஉருவாக்கம் செய்ய முயற்சித்து, ஹைபோபாஸ்பேட்மியாவுக்கு வழிவகுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *