செய்திகள்

6028 ஹஜ் பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

Spread the love

சென்னை,பிப்.25–

தமிழகத்தில் விண்ணப்பித்த 6028 ஹஜ் பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–-

இந்த ஆண்டு ஹஜ் பயணம் செய்வதற்கு 7 கைக்குழந்தைகள் உள்பட 6028 பேரின் விண்ணப்பங்களை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி பெற்றுள்ளது. ஆனால் தமிழகத்துக்கு 3,736 இடங்கள் மட்டுமே மத்திய ஹஜ் கமிட்டி ஒதுக்கி உள்ளது. மற்ற பயணிகளும் தங்களது விண்ணப்பங்கள் உறுதியாகி ஹஜ் பயணம் செல்வோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

மற்ற மாநிலங்களில் ரத்து செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உள்ளிட்ட காரணங்களால் பயன்படுத்தப்படாமல் உள்ள இடங்களை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும். தமிழக ஹஜ் கமிட்டி பரிந்துரைத்த 6028 பேரின் விண்ணப்பத்தையும் உறுதிப்படுத்த சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *