விழுப்புரம், பிப் .16–
உளுந்துார்பேட்டையில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணியை குமரகுரு எம்.எல்.ஏ., பந்தக்கால் நட்டு துவுக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்படவுள்ளது. இதற்காக திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினரான குமரகுரு எம்.எல்.ஏ., 4 ஏக்கர் நிலத்தை தனது சொந்த செலவில் வாங்கி திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.
அதனைத் தொடர்ந்து திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டுமான பணி வரும் 22ம் தேதி காலை 9 மணிக்கு பூமி பூஜையுடன் துவங்குகிறது. பூமி பூஜை விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருப்பதி தேவஸ்தான போர்டு குழுத் தலைவர் சுப்பா ரெட்டி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த விழாவிற்காக பந்தல் அமைக்கும் பணியை குமரகுரு எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் பழனிவேல், நகர செயலாளர்கள் துரை, பாபு, முன்னாள் ஒன்றிய துணைச் சேர்மன் சாய்ராம், ஸ்ரீவிநாயகா கல்வி குழும தலைவர் நமச்சிவாயம், மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், முன்னாள் மாவட்ட செயலாளர் கதிர் தண்டபாணி, ஜெ., பேரவை மாவட்டச் செயலாளர் ஞானவேல், மாணவரணி மாவட்ட துணை செயலாளர் பழனிமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.