செய்திகள்

ஆழ்வார்பேட்டை சங்கரா மினி அரங்கில் ரூ.24 லட்சம் மதிப்பு பஞ்சமுக லிங்கம் தரிசனம்

Spread the love

சென்னை, பிப். 20

ஆழ்வார்பேட்டை சங்கரா ஹால் மினி அரங்கில் நாளை (21 ந் தேதி) சிவராத்திரியையொட்டி ‘சிவாம்சம்’ என்னும் ருத்ராட்சம், சாளக்கிராமம், பாணலிங்கம், சிவசக்தி சிலைகள், பாதரச லிங்கம் ஸ்படிக மாலை, விலை உயர்ந்த அபூர்வ இயற்கை ராசிக்கற்கள், வாஸ்து, நோய் தீர்க்கும் பரிகார அபூர்வ கற்கள் விற்பனை கண்காட்சியை துவக்கி உள்ளது என்று ஷண்மதி கிரியேஷன்ஸ் தலைமை எக்சிகியூடிவ் அதிகாரி வி.மாலினி தெரிவித்தார்.

பல்வேறு ரக ருத்ராட்சங்களை பரிகாரத்துக்கு ஏற்றவாறு ஒருங்கிணைத்து அணிந்தால் பலன் கிடைக்கும் என்று நிர்வாகி வி.சோமசுந்தரம் தெரிவித்தார்.

சித்தமாலை என்னும் ருத்ராட்ச மாலையில் ஒரு முகம் முதல் 14 முகம் வரை ருத்ராட்சங்களையும், கவுரி சங்கர் என்னும் ருத்ராட்சம் மற்றும் கணேசர் ருத்ராட்சம் சேர்ந்த மாலையை அணிந்தால் 16 செல்வமும் பெற்று பெரு வாழ்வு வாழலாம். இந்த சித்தமாலை விலை ரூ.1.90 லட்சம் ஆகும்.

தேர்வுக்கு செல்லும் மாணவர்கள், பல்வேறு நேர்முக தேர்வுக்கு செல்பவர்கள் சரஸ்வதி பந்தம் என்னும் ருத்ராட்ச மாலையை அணிந்து வெற்றி பெறலாம். வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கலாம். இதன் விலை ரூ.910 முதல் உள்ளது.

தேர்வில் ஞாபகசக்தி, தைரியத்துடன் செயல்பட 4 முகம் (சரஸ்வதி) மற்றொரு 4 முகம் ருத்ராட்சத்துடன் 6 முகம் (முருகர்) கொண்ட ருத்ராட்ச மாலை உதவும்.

இதே சரஸ்வதி பந்தம் மாலையில் மற்றொரு ரகமாக 6 முகம் (முருகன்) மற்றொரு 6 முகம் ருத்ராட்சத்துடன் 4 முகம் (சரஸ்வதி) கொண்ட ருத்ராட்ச மாலை உள்ளது. இது முரடனையும் புத்திசாலி ஆக்கும்.

சரஸ்வதி பந்தம் 3வது ரகத்தில் 4 முகம், 5 முகம், 6 முகம் கொண்ட மாலை அணிந்தால் படிப்பு, உடல் நலம், நல்ல உடல் பலம் பெறலாம்.

காரியம் வெற்றி

காரிய சித்தி ருத்ராட்ச மாலையில் கல்விக்கு 4 முகம் (சரஸ்வதி) 5 முகத்தில் இரண்டு (சிவன்) உடல் நலத்துக்கும், 7 முகம் (மகாலட்சுமி) லட்சுமி கடாட்சத்துக்கும், 8 முகம் (விநாயகர்) தலைடை நீக்கவும் வசதிகள் கொண்டு வெற்றி மேல் வெற்றி பெற உதவும். இதன் விலை ரூ.9,600 ஆகும்.

நோய் அகல, உடல் நல சிகிச்சை குணம் அடைய ‘சுவஸ்திய பந்தம், ருத்ராட்ச மாலை நல்லது ஆகும். இதில் 5 முக சிவன் அம்ச ருத்ராட்சம் இருக்கும். ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கு பரிகாரமாக இருக்கும். அதிக சர்க்கரை அளவு உள்ள நோயாளிகள் 5 முகம் ருத்ராட்ச மாலை அணியலாம்.

இரவில் நீரில் ஊற வைத்து காலையில் அந்த நீரை குடித்து வந்தால் நோய் படிப்படியாக குறையும் என்றார் சிவசக்தி வேலாயுதம்.

சகஸ்ரலிங்க தரிசனம்

ஆழ்வார்பேட்டை சங்கரா மினி அரங்கில் 1008 பாண லிங்கம் கொண்ட சகஸ்ர லிங்க கண்காட்சியை ஷண்மதி கிரியேஷன்ஸ் நடத்தி வருகிறது. பிரம்ம புத்திர நதியில் உருவாகி வரும் இந்த பாணலிங்கம் ரூ.460 முதல் 6 ஆயிரம் வரை பல்வேறு ரகங்களில் விளங்குகிறது. ஒருவருக்கு ஆயுள், ஆரோக்கியம் பெற பாண லிங்கத்தை வீட்டில் வைத்து, அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டால், நல்ல பலன் கிடைக்கும். இது பற்றி அறியவும், கை விணைப் பொருட்கள் வாங்கவும் சங்கரா மினி அரங்கம் வரலாம். 95662 44871 அல்லது 82207 32187 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நேபாளத்தில் விளையும் ருத்ராட்சமாலை சக்தி வாய்ந்ததாக உள்ளது. தமிழ்நாட்டில் ஊட்டி பொட்டானிக்கல் கார்டனில் பெரிய ருத்ராட்சம் மரம் உள்ளது.

வாரணாசி இந்து பல்கலைக்கழகம் விஞ்ஞான பூர்வமாக ருத்ராட்ச மருத்துவ, காந்த சக்தி கொண்டுள்ளது என நிரூபித்துள்ளது.

மும்பை பல்கலைக்கழகம் ஆய்வில் ருத்ராட்சம் அதிக ரத்த அழுத்த நோயை குணப்படுத்துகிறது. 60% நோயாளிகள் முழுமையாக குணமாகின்றனர். 40% பேர் ஓரளவுக்கு நிவாரணம் பெற்றனர் என்று கண்டறியப்பட்டது. சங்கரா ஹால் மினி அரங்கில் ‘சிவாம்சம்’ விற்பனை ஷோரூமில் ருத்ராட்சம் மட்டுமின்றி சுத்தமான சாளக்கிராமம் விற்பனைக்கு உள்ளது.

வெள்ளருக்கு விநாயகர், பூஜைக்கு ஏற்ற சங்கு பெருத்த சத்தத்துடன் முழுங்கும் பால் சங்கு, போன்றவை இங்கு கிடைக்கும். இங்கு எந்த ருத்ராட்சம் அணியலாம் என ஆலோசனை வழங்கப்படுகிறது என்று ருத்ராட்சம் நிபுணரும் ஷண்மதி கிரியேஷன்ஸ் தலைமை செயல் அதிகாரியுமான வி.மாலினி தெரிவித்தார்.

இங்கு ரூ.1000 முதல் ரூ.3 லட்சம் வரை விலையில் ருத்ராட்சம் விற்பனைக்கு உள்ளது. இது தவிர தங்க வேலைப்பாடுடன் ருத்ராட்ச மாலைகள் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கையின் அன்பளிப்பாக மரத்தில் விளையும் ருத்ராட்சத்தை ஜாதி மத பேதமின்றி மகளிர், குழந்தைகள், அசைவ உணவு சாப்பிடுபவர்கள் இப்படி யாரும் அணியலாம்.

ஷண்மதி கிரியேஷன்ஸ் உலகளவில் ருத்ராட்சம் விற்பனை மற்றும் ஆய்வில் பிரபலமாக உள்ளது. இது வரை பல விற்பனை கண்காட்சி நடத்தியுள்ளது. ருத்ராட்சம் பற்றிய ஆய்வு, சிறப்பு பற்றி நன்கு அறிந்தவர்கள் இதன் நிர்வாகிகள் வி.சோமசுந்தரம், சக்தி வேலாயுதம் ஆகியோர். ஒரிஜினல் உயர்தர ருத்ராட்சத்தை உலக தரத்தில் இது வழங்குகிறது என்று வி.மாலினி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *