செய்திகள் வாழ்வியல்

காகித விழா மர விழா அலுமினிய விழா தெரியுமா ? | புத்தக மதிப்புரை

Spread the love

வெள்ளி விழா, பொன்விழா, வைரவிழா, பவளவிழா, நூற்றாண்டு விழா என்றால் அது எத்தனையாவது ஆண்டு என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்னால் ஒவ்வொரு ஆண்டிலும் வரும் விழாக்கள் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? தெரியாதவர்களுக்காக ஒரு தகவல்.

ஒரு வருடம் நிறைந்தால் அது காகித விழா. 5 வருடம் நிறைந்தால் மர விழா. 10 வருடம் நிறைந்தால் தகரம் அல்லது அலுமினிய விழா. 15 வருடம் நிறைந்தால் படிக விழா. 20 வருடம் நிறைந்தால் பீங்கான் விழா.

இப்படி அருமையான தகவலைப் பதிவு செய்திருக்கிறார் யமுனைத்துறைவன். (எழுத்துலகில் குடந்தை பாலு என்று அறியப்பட்டவர்) புத்தகம்: பல்சுவை களஞ்சியம். போட்டித் தேர்வுகளுக்கு பயனுள்ள விதத்தில் இந்நூலை அவர் தொகுத்து தந்திருக்கிறார்.

* இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் அம்பயர் அஞ்சலி ராஜகோபால்.

* தமிழ்நாட்டில் மிகப் பெரிய அணைக்கட்டு மேட்டூர் அணை.

* மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதக் கற்றுக் கொடுக்கும் நாடு ஜப்பான்.

* உலகின் மிகப் பெரிய புத்தகம் பிரான்ஸ் நாட்டில் டூலவ்ஸ் என்னும் நகரில் வெளிவந்துள்ளது. இதன் நீளம் 4 மீட்டர், அகலம் 3 மீட்டர், எடை 8 டன்கள்.

* ஒரு சிகரெட்டில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் 4700 ரசாயன பொருட்கள் உள்ளன.

* வேர் இல்லாத தாவரம் இலுப்பை மரம்

இப்படி 192 பக்கங்களிலும் வியக்கத்தக்க விதத்தில் ஏராளமான துணுக்குச் செய்திகள், விடுகதைகள், பொன்மொழிகள், அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள் கலை இலக்கிய படைப்பாளிகள் விளையாட்டு வீரர்கள் பற்றிய சிறு சிறு விவரக் குறிப்புகள் என்று பல தகவல்களை பதிவு செய்து இருக்கிறார் நூல் ஆசிரியர்.

வெவ்வேறு சந்தர்ப்பங்களில், வெவ்வேறு புத்தகங்களில் படித்து ரசித்த ருசிகர தகவல்களையும் அறிவு பூர்வமான விஷயங்களையும் திரட்டி நூலைத் தந்திருக்கிறார்.

பதிப்பகம்: ஜீவா

விலை ரூபாய். 180.

கிடைக்குமிடம்: அறை எண் 31, மனோகர் மேன்சன்,

12/28, சௌந்தரராஜன் தெரு,

சென்னை 6000 17,

கைபேசி :9952079787

  • வீ. ராம்ஜீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *