சிறுகதை

தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்?

‘‘எப்போதும் போராட்டமும் புயலுமே வாழ்க்கையா? என்னதான் ஒரு வங்கியில் காசாளராய் வேலை செய்தாலும் எத்தனை, எத்தனை போராட்டங்கள்! அப்பா!’’

சுய லாபத்திற்காகவே உறவாடும் உறவினர்களும் காரியத்தனமாகவே உதவி நாடி வரும் மற்றவர்களும் அப்பாடா! அலுத்துவிட்டது அபிராமிக்கு. கணேஷ் மிகவும் நல்லவனாய்த் தெரிந்தான்.

கணேஷை சமீப காலமாய் ….ஒரு 6 மாதங்களாய் தான் அபிராமிக்கு தெரியும். எத்தனை இனிமையான நல்லுணர்வுகளோடு பழகுகிறான். அபிராமியின் அப்பாவை, மருத்துவமனையில் சேர்த்தபோது, கூடவேயிருந்து கவனித்தான்.

சிலிர்த்துவிட்டது அபிராமிக்கு. பக்த்து வீட்டு neighbor–ஆக மட்டுமின்றி, இன்றைக்கு எல்லாமே அவனாகத் தெரிந்தான் அபிராமிக்கு.

ஒரு சகோதர உணர்வோடு, எந்த இச்சைகளும் இல்லாது, பாசத்தோடு பழகும் அவனுக்காக அபிராமி அவளின் 50 பவுன் நகைகளை Bank–ல் வைத்து ரூ.3 லட்சம் கடன் கொடுத்திருந்தாள்.

ஆயிற்று 1 மாத காலம் ஊருக்கு போன கணேஷ் வரவில்லை.

பழகிய தவிப்பில் அபிராமி, அலைபேசியில் தொடர்பு கொள்ள “Madam, நான் அடுத்த வாரம் வருகிறேன்’’ எனச் சொன்னான்.

ஆனால் நாட்கள் மட்டுமே ஓடின.

‘அம்மாவிற்கு உடம்பு சரியில்லை. Please எனக்கு 3 லட்சம் உடனே வேணும்’ என்று சொன்னானே, ‘ஏன்’? என்ன ஆயிற்று?’ அலைபேசி எண்ணை அணுகினாள்.

‘நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர், தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்’’ இதையே கேட்டு, கேட்டு வெறுத்தவளாய்….. மீண்டும் 2 நாட்கள் கழித்து தொடர்பு கொள்ள, அலைபேசியின் தானியங்கி “This number doesn’t exist. நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் உபயோகத்தில் இல்லை.’ என்றது.

அதிர்ச்சியில் அபிராமி… ஏமாளியானாள்.

‘யாரைத்தான் நம்புவதோ

பேதையின் நெஞ்சம்

அம்மம்மா பூமியிலே

யாவும் வஞ்சம்’.

இந்தப் பாடலை அவள் அலைபேசியின் ரிங் டோனாய் ஆக்கினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *