வாழ்வியல்

தொற்றுநோய்க் கிருமிகளின் தோற்றம், அழிவு பற்றிய முழுமையான தீர்வுகள் – ஆராய்ச்சி முடியவே இல்லை

அறிவியல் என்பது கருவிகளைக் கடந்தும் இருக்கலாம் என்பதை ஏற்றுகொள்கிற பக்குவம் நமக்கு வரவேண்டும்.

இப்படியான சிந்தனைதான் அறிவியலை அதன் அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதாக அமையும்.

இன்னும் சராசரி மக்களுக்கு எட்டாத தூரத்தில் மருத்துவ அறிவியலின் ரகசியங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

உலகத்திலேயே ஆறு நாடுகளில்தான் போலியோ சொட்டு மருந்து புழக்கத்தில் உள்ளது. தடுப்பு நடவடிக்கைகளே இல்லாத பல நாடுகளிலும் இன்று போலியோவின் தாக்கம் குறைந்துள்ளது.

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து விஞ்ஞானிகளில் ஒரு பிரிவினர் அதை எதிர்த்து வருகின்றனர். உலகம் முழுவதும் தடுப்பூசி மருந்துகளால் பாதிக்கப்பட்ட மக்கள் “தடுப்பூசி எதிர்ப்புச் சங்கம்”( Anti Vaccination Leaque) ஒன்றை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் நடத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் பீதியைக் கிளப்பிய சிக்கன்குனியா காய்ச்சலுக்கு தடுப்பு மருந்துகளோ, கட்டுப்படுத்தும் மருந்துகளோ கண்டுபிடிக்கப்படாத நிலையில் அந்நோய் தானே குறைந்துபோய் உள்ளது.

திடீர், திடீரென பீதியைக் கிளப்பி பின் மறைந்து போகும் இந்த நோய்கள் உருவாகக் காரணம் என்று நம்பப்படும் கிருமிகளின் தோற்றம், அழிவு பற்றிய முழுமையான தீர்வுகள் இன்னும் முன்வைக்கப்படவே இல்லை.

என்றாலும் வணிக ரீதியாக விற்பனை செய்யப்படும் எல்லா பொருட்களுக்குமான விளம்பரங்கள் அனைத்தும் கிருமிகளின் மீதே கட்டமைக்கப்படுகின்றன.

ஆட்கொல்லி நோய் என நம்பப்படும் எய்ட்ஸுக்கு காரணமாகக் கூறப்படுவது – H.I.V. `என்னும் கிருமிதான். இந்தக் கிருமியக் கண்டுபிடித்த விஞ்ஞானி டாக்டர். லுக்மோன் பிக்னியர் “H.I.V. கிருமி எய்ட்ஸுக்கு காரணமல்ல: இதைப்பற்றிய ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளில் எக்கச்சக்கமான குளறுபடிகளும் பித்தலாட்டங்களும் உள்ளன” என்று ( மியாமி ஹெரால்டு 23.12.1990) தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்…

வித விதமான குழப்பங்களும் எண்ணற்ற கேள்விகளும் கண்டுபிடிப்புகளின் பின்னால் வருகின்றன என்றாலும் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் முழுமையாவதற்கு முன்பே யாருடைய கட்டாயத்தினாலோ சந்தைக்கு வந்து அந்த ஆராய்ச்சியின் முழுப் பயனும் மனிதகுலத்திற்கு கிடைக்க கலதாமதமாகி விடுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *