சென்னை, பிப்.23–
துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தமிழக சட்டசபையில் 2021–22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.சட்டசபை காலை 11 மணிக்கு கூடியது. 11.02 மணிக்கு இடைக்கால பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் படிக்க துவங்கினார். பட்ஜெட் உரை மொத்தம் 89 பக்கம் ஆகும். 11.02 மணிக்கு பட்ஜெட் உரையை படிக்க துவங்கிய ஓ. பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையை 1.32 மணிக்கு படித்து முடித்தார். மொத்தம் 2 மணி நேரம் 30 நிமிடம் அவர் பட்ஜெட் உரையை படித்தார். பட்ஜெட் உரையை படித்து முடித்த பின், சபாநாயகர் தனபால், மீண்டும் சட்டசபை 25–ந்தேதி காலை 10 மணிக்கு கூடும் என்று அறிவித்தார்.