செய்திகள்

பட்ஜெட் உரை: 3.20 மணி நேரம் படித்தார் ஓ.பி.எஸ்.

சென்னை, பிப்.14–

தமிழக சட்டசபையில் இன்று துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2020–21–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை 3 மணி 20 நிமிட நேரம் படித்தார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து படித்தார்.

காலை 10 மணிக்கு சட்டசபை துவங்கியது. சபாநாயகர் திருக்குறனை படித்து முடித்ததும், துணை முதலமைச்சர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து 10 மணிக்கு படிக்க துவங்கிய அவர் மதியம் 1.20 மணிக்கு தனது பட்ஜெட் உரையை நிறைவு செய்தார். பட்ஜெட் மொத்தம் 113 பக்கங்களை கொண்டதாக இருந்தது. பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் படித்து முடித்ததும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.

பட்ஜெட் உரை படித்து முடிந்ததும் சபையை 17–ந் தேதிக்கு சபாநாயகர் தனபால் ஒத்தி வைத்தார்.

சட்டசபைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக காலை 9.57 மணிக்கு வந்தார்கள். ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் புத்தகத்தை சிறிய சூட்கேசில் வைத்து கொண்டு வந்தார். இருவரும் சபைக்குள் வந்ததும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று மேஜையை தட்டி பலத்த ஆரவாரத்துடன் வரவேற்றார்கள்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 10–வது பட்ஜெட் ஆகும் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *