செய்திகள்

அரசின் தலைமை பொறுப்பில் 20–வது ஆண்டு: மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சென்னை, அக்.8-

குஜராத் முதலமைச்சரில் இருந்து தொடங்கி பிரதமர் பதவி வரையிலும் என தொடர்ச்சியாக அரசின் தலைமை பொறுப்பில் 20–வது ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அடியெடுத்து வைத்துள்ளதற்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

எந்தவித இடைவெளியும் இன்றி அரசு தலைமை பொறுப்பில் 20-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு என்னுடைய இதயங்கனிந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நமது தேசத்தை இன்னும் உயர்வாக கொண்டு செல்வதற்காக இன்னும் பல வருடங்கள் நீங்கள் சேவையாற்றவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *