காஞ்சீபுரம், பிப். 22-
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆசியுடன், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் மகன் இரா.அஷ்வின் பி.ஷண்முகப்பிரியா ஆகியோரின் திருமணம் இன்று காலை சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் வெகு சிறப்பாக நடை பெற்றது.
இந்த திருமணத்தில் அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அவரை சிட்லபாக்கம் ச.ராசேந்திரன், அவரது துணைவியார் ருக்மணி ராசேந்திரன் ஆகியோர் வரவேற்றனர். பிறகு துணை முதல்வர் பன்னீர்செல்வம் மணமக்களை அட்சதை தூவி வாழ்த்தினார். பின்னர் மணமக்கள் துணை முதல்வரிடம் ஆசி பெற்றனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, பா. பென்ஜமின், தமிழ்நாடு பாடநூல் தலைவர் பா.வளர்மதி, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி காஞ்சீ பன்னீர்செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமார், மாநில டான்சில்க் தலைவர் பூக்கடை ஆர்.டி.சேகர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் இடைக்கழிநாடு ஜெ.பாலசுப்பிரமணியன், காஞ்சீபுரம் மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாணவரணி செயலாளர் செம்பாக்கம் ஜி.எம்.சாந்தகுமார், பரங்கிமலை ஒன்றிய கழக செயலாளர் என்.சி.கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ம.தனபால், எஸ்.கணிதாசம்பத், பா.தன்சிங், செய்யூர் ராஜி, மண்டல அறங்காவலர் குழு தலைவர்கள் ஏ.எம்.பொன்னுசாமி, எல்.ஆர்.செழியன், மண்டல அறங்காவலர் குழு உறுப்பினர் வி.ரகுராமன், ஒன்றிய செயலாளர்கள் மேலமையூர் இ.சம்பத்குமார், சிங்கபெருமாள் கோவில் எஸ்.கௌஷ்பாஷா, மாவட்ட அண்ணா தி.மு.க. நிர்வாகி மறைமலைநகர் எம்.ஜி.கே.கோபிகண்ணன், அஞ்சியூர் தேவராஜன், மாவட்ட பிரதிநிதி மதுராந்தகம் சித்தப்பாகிருஷ்ணன், இலக்கிய அணி துணை செயலாளர் கவிஞர் எஸ்.முருகவேள் மற்றும் வாரிய தலைவர்கள், அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், தொழிலதிபர்கள், நகர பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
மேலும் பல கோவில்களில் இருந்து வந்த பிரசாதங்கள் மணமக்களிடம் வழங்கப்பட்டது.