செய்திகள்

இன்று 3வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைப்பு

புதுடெல்லி, மார்ச் 10–

மாநிலங்களவையில் 3வது நாளாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. சபை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தது. அந்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், முதல் நாளிலேயே இரு அவைகளும் முடங்கின.

இந்தநிலையில், நாடாளுமன்ற இரு அவைகளும் நேற்று முதல் வழக்கமான நேரப்படி காலை 11 மணிக்கு செயல்படத் தொடங்கின. மக்களவை கூடியவுடன், கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது ஆனால், எரிபொருட்கள் விலை உயர்வு குறித்து விவாதிக்கக்கோரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிடத் தொடங்கினர். நேற்றும் அமளி தொடர்ந்து நீடித்ததால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் அதே நிலைதான் நீடித்து வருகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *