இந்தியாவில் வானவியல் ஆராய்ச்சி படிப்பு படிக்க ஏராள வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
வானவியல் ஆராய்ச்சி தொடர்பான படிப்புகளை புனேயில் உள்ள தேசிய வானவியல் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்கலாம். அதிக வேலைவாய்ப்பு உள்ள இந்த படிப்பில் மாணவர்கள் ஆர்வத்தில் ஈடுபட முன் வரலாம். வேதியியல் துறை தொடர்பான ஆராய்ச்சி படிப்புகள் புனேவில் உள்ள தேசிய கெமிக்கல் ஆய்வு கூடத்தில் படிக்க முடியும்.
அதுபோல் எலக்ட்ரானிக் துறையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. மருத்துவத் துறை உட்பட அனைத்து துறைகளிலும் எலக்ட்ரானிக்ஸ் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இத்துறையில் செல்ல விரும்பும் மாணவர்கள் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் சேர்ந்து கல்வி பயின்று பயன் பெறலாம்.