செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்

உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவி காலம் நீட்டிப்பு

சென்னை, பிப். 4–

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை இன்று சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

அவசரச் சட்டத்தின் மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்ட நிலையில், சட்டமாக்குவதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் 6 மாதங்களுக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட அரங்கம் வைத்திருப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனி அதிகாரிகள் பதவி காலம் நீட்டிப்பு

அதேபோல், உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான மசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தாக்கல் செய்தார்.

தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை ஜூன் வரை நீட்டிக்க மசோதாவை தாக்கல் செய்தார். உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதாவும் தாக்கலானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *