செய்திகள்

புதுவை கிளை நூலகங்களில் ஆன்லைன் வசதி: கவர்னர் கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரி, நவ.15–

புதுவை கலை பண்பாட்டுத் துறையின் மேம்பாட்டு பணிகள் குறித்து அந்த துறையின் செயலாளர் சவுத்ரி அபிஜித் விஜய் மற்றும் துறை அதிகாரிகளுடன் கவர்னர் கிரண்பேடி கலந்துரையாடினார்.

கூட்டத்தில் நூலகத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் நூலகங்களில் கையாள ஆன்லைன் வசதி ஏற்படுத்த வேண்டும். நூலக இணையதளத்தில் செய்திகள், இதழ்கள் பொதுமக்கள் படிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு நூலக பதிவு இலவசமாக்கப் படவேண்டும். கிளை நூலகங்களில் ஆன்லைன் வசதி கொண்டு வர வேண்டும். கொரோனோ ஊரடங்குக்கு பிறகு நூலகங்களை திறப்பது தொடர்பான விரிவான செயல் திட்டத்தை தயாரிக்க கவர்னர் உத்தரவிட்டார்.

அருங்காட்சியகங்களில் பார்வையற்றோர் பார்வையிட வசதியாக ஒளிப்பதிவுடன் கூடிய படங்களை திரையிட வேண்டும். புதுவையின் பெருமைகளை யூ–டியூப் சேனல் வாயிலாக பதிவேற்றம் செய்து உலகின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இதற்கான பங்களிப்பை பாரதியார் பல்கலைக்கூடம் மொழியியல் பண்பாட்டு மையம் இணைந்து அளிக்கவேண்டும். தொல்லியல், நூலக அறிவியல், அருங்காட்சியகம் உள்ளிட்ட துறைகளில் மாணவர்கள் இன்டர்ன்சிப் செய்ய அனுமதிக்க வேண்டும் என கிரண்பேடி அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *