செய்திகள்

கடன் தவணைகளை முறையாக செலுத்தியவர்களுக்கு சலுகை: மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி

வங்கிக் கடன் தவணை தள்ளிவைப்பு காலத்திற்கு கூட்டு வட்டியை தள்ளுபடி செய்ய உள்ள மத்திய அரசு, அந்த காலகட்டத்தில் முறையாக தவணையை செலுத்தியவர்களுக்கும் சலுகை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாத காலத்திற்கு, கடன் தவணைகளை தள்ளி வைத்தவர்களுக்கு, 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டி மீதான வட்டியை மத்திய அரசு தள்ளுபடி செய்ய உள்ளது.

கொரோனா காரணமாக, மார்ச் 27 ம் தேதி, இந்திய ரிசர்வ் வங்கி கடன் வாங்குவோருக்கு ஏதுவாக மார்ச் 1 முதல் கடன்களுக்கு மூன்று மாத கால அவகாசம் அறிவித்தது. மே 22 அன்று அதை மேலும் 3 மாதங்கள் நீட்டித்தது.

தீபாவளிக்கு முன்னதாக சலுகை குறித்த அறிவிப்பை வெளியிட உள்ள மத்திய அரசு, கூட்டு வட்டி தள்ளுபடியால் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்ட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 6 மாத காலத்தில் கடன் தவணைகளை முறையாக செலுத்தியவர்களுக்கும் சலுகை அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *