செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 24-வது சதம் அடித்தார் கேன் வில்லியம்சன்

கிறைஸ்ட்சர்ச், ஜன. 4–

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தனது 24-வது சதத்தை அடித்துள்ளார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டை 101 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து, டெஸ்ட் தொடரில் 1-–0 என முன்னிலை வகிக்கிறது. கிறைஸ்ட்சர்ச்சில் நியூசிலாந்து -– பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 297 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் 2-வது நாளான இன்று நியூசிலாந்து அணி அபாரமாக பேட்டிங் செய்து வருகிறது. கேப்டன் கேன் வில்லியம்சன் 140 பந்துகளில் சதமடித்தார். இது அவருடைய 24-வது டெஸ்ட் சதம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *