வாழ்வியல்

நோனிப் பழச்சாறு உட்கொண்டால் மாதவிலக்கு கோளாறுகள், வயிற்று உபாதைகள், நாட்பட்ட சளி,தொண்டை அழற்சி குணமாகும்

பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியதுடன் பெருமளவு மக்களால் விரும்பி உட் கொள்ளப்படும் அற்புத பழம்தான் நோனி.

நோனி பழச்சாறாகவும் நோனி பொடியாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பழங்களில் கரிநீரகங்களும் நார்ச்சத்தும் ஏராளமாக காணப்படுகிறது.

வைட்டமின் ஏ, வைட்டமின் பி3, வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துகளும் பிளேவனாய்டுகள், ஸ்கோபோ லெட்டின், காந்தல், இரிடாய்டுகள் போன்ற தாவர வேதிச் சத்துக்களும் ஏராளமாக காணப்படுகிறது.

இவை மார்பக புற்று நோய் மற்றும் மாதவிலக்கு கோளாறுகளை கட்டுப்படுத்துவதாக ஆரம்ப கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நோனி பழச்சாற்றை உட் கொண்டு வர, மாதவிலக்கு கோளாறுகள், வயிற்று உபாதைகள், நாட்பட்ட சளியில் தோன்றும் தொண்டை அழற்சி ஆகியவை நீங்கும். பழச்சாறு மட்டுமின்றி, நோனிப்பட்டையிலுள்ள அலிசாரின் மற்றும் கிளைக் கோசைடுகள் மூட்டுவாதத்தில் தோன்றும் வீக்கம் மற்றும் தூக்க மின்மையை நீக்கி, புத்துணர்ச்சியை உண்டாக்குகிறது. இதன் பட்டையிலுள்ள ரூபிக் குளோரிக் அமிலம் குடற்பாதையில் தோன்றும் நுண்கிருமிகளின் தேவையற்ற வளர்ச்சியை நீக்குகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *