செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன்: ஜோகோவிச் 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை

மெல்போர்ன், பிப். 9–

ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தை 9 முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-–4, 6–-3 என்ற நேர் செட் கணக்கில் ஜெனிபர் பிராடியை (அமெரிக்கா) வீழ்த்தி 2-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதே போல் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் ராஜீவ் ராம், செக்குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜ்சிகோவா கூட்டணி 6–-1, 6–-4 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன்-சமந்தா – ஸ்டோசுர் ஜோடியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் இரட்டையர் போட்டியில் அமெரிக்காவின் ராஜீவ் ராம் – பிரிட்டனின் ஜோ சாலிஸ்பரி ஜோடியை 6-–3, 6-–4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி குரோஷியாவின் இவான், டோடிக் – ஸ்லோவேகியாவின் பிலிப் போலாசெக் ஜோடி சாம்பியன் ஆனது.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி நடைபெற்றது. இதில் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா)–, டேனில் மெட்விடேவ் (ரஷியா) ஆகியோர் மோதினர். ஜோகோவிச் 7-–5, 6–-2, 6–-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டம் வென்றார். இதனால் தொடர்ந்து 3வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்ற சாதனை படைத்துள்ளார். ஜோகோவிச் முன்னதாக 2011 முதல் 2013 வரையும், தற்போது 2019 முதல் 2021 வரையும் தொடர்ந்து 3 முறை ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். மேலும் அவர் படைத்துள்ளதுடன் இது அவரது 9வது ஆஸ்திரேலிய ஓபன் வெற்றியாகும். இதுவரை ஜோகோவிச் மொத்தம் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதுவரை ஜோகோவிச் மொத்தம் 18 கிராண்ட்ஸ்லாம் பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஆடவர் பிரிவில் ரோஜர் பெடரர் மற்றும் ரபேல் நடால் ஆகிய இருவரும் 20 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களை நெருங்கும் வகையில் ஜோகோவிச் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். 30 வயதுக்கு மேல் ஜோகோவிச் 6 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் ரபேல் நடாலின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

புதிய சாதனை

மேலும் இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச் உலகின் முதல்நிலை வீரராக மீண்டும் தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளார். மார்ச் 8-ஆம் தேதி வரை முதலிடத்தில் நீடிப்பார். இதன்மூலம் உலகின் முதல்நிலை வீரராக 311 வாரங்கள் இருந்த வீரர் என்ற புதிய சாதனையை ஜோகோவிச் படைத்துள்ளார். முன்னதாக ஸ்விட்சார்லாந்தின் ரோஜர் பெடர் 310 வாரங்கள் முதல்நிலை வீரராக இருந்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெற்றி குறித்து ஜோகோவிச் கூறியதாவது:

இதுநாள் வரையில் விளையாடிய போட்டிகளில் உணர்வுப்பூர்வமாக மிகக் கடினமான ஒரு போட்டியாக உண்மையில் இதுதான் இருந்ததாகக் கருதுகிறேன். எனது அடிவயிற்றில் தசை கிழிந்துள்ளது. இருப்பினும் வலி நிவாரணிகள் எடுத்துக்கொண்டு போட்டியை நிறைவு செய்துள்ளேன். நிச்சயம் அடுத்து பரிசோதனை செய்துகொண்டு சிறிது காலம் ஓய்வெடுப்பேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *