போஸ்டர் செய்தி

‘‘தீர்ப்பை மதிக்கிறோம்; திருப்தி இல்லை’’: சன்னி வக்பு கருத்து

Spread the love

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினை மதிக்கிறோம் ஆனால் அதில் திருப்தியில்லை என்று சன்னி வக்பு வாரியம் தெரிவித்து உள்ளது. இது குறித்து சன்னி வக்பு வாரிய வழக்கறிஞர் ஜாபர்யாப் ஜிலானி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘நாங்கள் எதிர்பார்த்தபடி தீர்ப்பு கிடைக்கவில்லை. இதனை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கான சட்ட ரீதியிலான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம்’. என்றார்.

போராட்டம் கூடாது

தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். தீர்ப்பை யாருடைய வெற்றி, தோல்வியாக கருதக் கூடாது. அனைவரும் அமைதி காக்க வேண்டும். நீதிபதிகளின் கருத்துகளை நாங்கள் மறுக்கவில்லை. யாரும் எந்த விதமான போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது. எங்களின் நிலம் வேறு சிலருக்கு வழங்கப்பட உள்ளது என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *