நாடும் நடப்பும்

‘ஹெபடைட்டிஸ்’ தடுப்பு ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு

நடப்பு ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசுஹெபடைட்டிஸ் சி’ கிருமியை கண்டுபிடித்து பல்வேறு ஆராய்ச்சிகளில் வெற்றி கண்ட 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கிருமிகள் என்பது உலகமே பாதிப்படையும் தன்மையை கொண்டது என்ற விழிப்புணர்வு 19–ம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே புரிந்துகொண்ட ஒன்றுதான் என்றாலும் சமீபத்திய கொரோனா வைரஸ் பெரும் தொற்று ஏற்படுத்தி வரும் சர்வ நாசத்தை பார்க்கும் போது கிருமியின் சக்தியைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏழை, பணக்காரர், எளியோர், வலியோர், சாமானியன், சக்திவாய்ந்த பொறுப்பில் இருப்பவர் என யாரையும் பாகுபடுத்திப் பார்க்காமல் கிருமிகள் தாக்கி வருகிறது.

ஆகவே இதற்கான சிகிச்சையும் தடுப்பு மருந்தும் எல்லோருக்கும் அவசியம் தேவைப்படும் ஒன்றாகவே இருக்கிறது.

ஆனால் இன்றைய வர்த்தகமயமாகி விட்ட வாழ்வியல் முறையில் மருத்துவ ஆராய்ச்சிகளும் லாபக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவது வேதனை தருகிறது.

முன்பு நமக்கு மிகப்பெரிய உயிர்க்கொல்லியாக இருந்த பல்வேறு கிருமிகளை எதிர்க்கும் சக்தியை நமக்கு தந்தவர்கள், முன்பு இருந்த விஞ்ஞானிகள் ஆவர், அவர்கள் யாருமே வியாபார கண்ணோட்டத்தில் ஆய்வுகளில் ஈடுபட்டு இருக்க மாட்டார்கள். அவர்களது தன்னலமற்ற ஆராய்ச்சி அர்ப்பணிப்பு காரணமாகத்தான் இன்று நாம் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அதே மனநிலையோடு இன்றும் பல விஞ்ஞானிகள் ஆய்வுகளில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பது உண்மையில் நாம் பாராட்ட வேண்டிய ஒன்றாகும்.

அந்த வகையில் இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் ஹெபடைட்டிஸ் என்பது கல்லீரலில் ஏற்படும் ஒரு வகை தொற்று நோயாகும். ஹெபடைடிஸ் பி என்பது மஞ்சள் காமாலை நோயாகும்.

ஆனால் இன்றோ உரிய நேரத்தில் கண்டுபிடித்து விட்டால், உரிய சிகிச்சை தந்து பூரண குணமடைய செய்துவிட முடிகிறது.

ஆனால் உடனடியாக மருத்துவரை அணுகாவிட்டால் உயிருக்கே ஆபத்தானதாகவே மாறிவிடுகிறது.

இந்த நோயின் கிருமிகள் ஏ, பி, சி என மூன்று ரக தன்மைகள் கொண்டிருக்கிறது. இதில் ‘சி’ என்ற மூன்றாவது ரகத்தைப் பற்றிய தீவிர ஆய்வுகள் நடத்தி, அதன் உயிர் வாழும் தன்மையை முழுமையாக புரிந்து கொண்டு எப்படி அந்த கிருமியை நமது உடலில் இருந்து முழுமையாக விரட்ட மருந்துகள் வந்துவிட்டது.

இந்த நோய் ரத்தத்தின் வழியாகவும் தொற்று ஏற்படுத்தி விட்டால், அது பல நேரங்களில் உயிர் பறிக்கும் கொடூர நோயாகவும் இருக்கிறது.

நாம் இன்று ஆரோக்கியமாக வாழ அன்றே இதுபோன்ற பல்வேறு கிருமிகளை அழித்த ஆய்வுகளின் வெற்றியை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு நமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வோம்.

இம்முறை அமெரிக்கா, பிரிட்டனை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ நோபல் பரிசு கமிட்டியின் பொதுச் செயலாளர் தாமஸ் பெர்ல் மேன், ஸ்டாக்ஹோமில் கூறும்போது, ‘‘2020–ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் ஹார்வி ஜேம்ஸ் ஆல்டர் (85), சார்லஸ் ரைஸ் (68) மற்றும் பிரிட்டனை சேர்ந்த மைக்கேல் ஹாட்டனுக்கு (70) வழங்கப்படுகிறது. ஹெபடைடிஸ் சி வைரஸை கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 7 கோடிக்கும் மேற்பட்டோர் ஹெபடைடிஸ் வைரசால் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 4 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளின் பலனாக கடந்த 1960களில் ஹெபடைடிஸ் ஏ, பி ரைவஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது பெரும் சாதனையாக கருதப்பட்டது.

இதே வரிசையில் விரைவில் கொரோனா வைரஸ் தொற்று பற்றிய ஆழமான ஆய்வுகளுக்கும் மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கும் அடுத்த ஆண்டு நோபல் பரிசு பெறத் தகுதி உடையவராவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *