செய்திகள்

மேற்படிப்புகளில் சேர அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இல்லை: சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி, நவ. 27–

தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்புகளில் சேரும் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இல்லை என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

அரசு டாக்டர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் ஆணையை எதிர்த்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

அரசு டாக்டர்களுக்கு, மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும், தமிழக அரசின் உத்தரவை ஐகோர்ட் உறுதி செய்திருந்த நிலையில், தனியார் மருத்துவமனை டாக்டர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இந்த ஆண்டு அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இல்லை என்று உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *