செய்திகள்

பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் இப்போது இல்லை: செங்கோட்டையன் பேட்டி

‘நீட்’ தேர்வில் இந்திய அளவில் அரசு பள்ளிகளில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை

பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் இப்போது இல்லை:

செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு, அக்.18–

தமிழகத்தில் பள்ளிகள் திறக்க இப்போது வாய்ப்புகள் இல்லை என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, கொளப்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் சு.ஈஸ்வரன் முன்னிலையில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரூ.3.44 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப்பணிக்கு பூமிபூஜையிட்டு, முடிவுற்ற சாலை பணிகளை திறந்து வைத்தார். 93 பயனாளிகளுக்கு இரு கறவை மாட்டு கடனுதவிகளையும் வழங்கினார்.

இன்று ஒரே நாளில் 93 நபர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் வீதம் கறவை மாடுகள் வாங்குவதற்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கறவை மாடுகளுக்கு 3 ஆண்டு காலத்திற்கு காப்பீடு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசு பள்ளி

மாணவன் சாதனை

முதலமைச்சரின் முயற்சியின் காரணமாக 7.50 சதவீதம் முழு இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் அரசுபள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிக்கு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள். இபாக்ஸ் மூலம் நீட் தோ்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு பள்ளியில் படித்த மாணவன் நீட் தேர்வில் இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர் என்ற சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தின் பாடத் திட்டத்தின் தரத்தை இந்தியா முழுவதும் வியந்து ஏற்றுக் கொண்டுள்ளது. 12 ஆண்டு கலத்திற்கு பிறகு மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டத்திலிருந்து தான் நீட் தோ்வில் 180 கேள்விகளில் 174 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை.

முதல் தேர்வில் தோல்வியுற்று, இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பயற்சி மையம் மூலம் பயிற்சி பெற்றுக்கொள்ள வேண்டும். முதல் முறை தோல்வியுற்ற மாணவர்களுக்கு 2வது முறையாக அரசுப் பயிற்சி வழங்காது என்று கூறியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தலைவர் கே.கே.காளியப்பன், கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன், காவல் துணைக்கண்காணிப்பாளர் தங்கவேல் உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *