போஸ்டர் செய்தி

குஜராத்தில் நித்தியானந்தா ஆசிரமம் மூடல்: போலீசார் அதிரடி நடவடிக்கை

Spread the love

ஆமதாபாத்,டிச.2–

தனியார் பள்ளி வளாகத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்ததாக மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையின் பேரில் குஜராத்தின் ஹிராபுர் பகுதியில் செயல்பட்டு வந்த சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் ஆசிரமம் மூடப்பட்டது.ஹிராபுர் பகுதியில் செயல்பட்டு வந்த நித்தியானந்தா ஆசிரமம் மீது மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் நடத்திய விசாரணையில் தனியார் பள்ளி வளாகத்தில் சட்ட விரோதமாக நித்தியானந்தா ஆசிரமம் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. பள்ளி வளாகத்தில் ஆசிரமம் செயல்பட அனுமதி உள்ளதாக நித்தியானந்தா ஆசிரம நிர்வாகம் அளித்த சான்றிதழும் போலி என தெரிய வந்தது. இதனையடுத்து ஆசிரமம் செயல்படுவதற்கான உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து பள்ளி வளாகத்தில் இருந்த ஆசிரமம் உடனடியாக மூடப்பட்டது. ஆசிரமத்தில் தங்கி இருந்தவர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் ஆசிரமம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. தனது இரு மகள்களையும் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்டுத் தரும்படி ஜெகநாதன் என்பவர் புகார் கூறி வந்த நிலையில் குஜராத்தில் இருந்த நித்தியானந்தா ஆசிரமம் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *