செய்திகள்

பஸ்சில் தொங்கியபடி பயணித்த மாணவர்களுக்கு நூதன தண்டனை

Spread the love

சென்னை, நவ.16-

சென்னை மாநகர பஸ்களில் பள்ளிக்கூட மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்கின்றனர். மாணவர்கள் இதனை தவிர்க்க வேண்டும் என்று பலமுறை அறிவுரைகள் வழங்கியும், தொடர்ந்து அவர்கள் அதே பயணத்தை தான் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்று போக்குவரத்து போலீசாருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், சென்னை மாநகரில் பஸ்சில் தொங்கியபடி செல்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூதன தண்டனை வழங்கப்பட்டது.

அதன்படி சென்னை புரசைவாக்கம் டவுட்டன் பாலம் அருகே மாநகர பஸ்சில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்களை, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் டேனியல்ராஜ் மற்றும் போலீசார் மடக்கி பிடித்து, அவர்களுடைய வீட்டு முகவரி, பெற்றோர் செல்போன் எண் ஆகியவற்றை எழுதி வாங்கினர்.

மேலும் இனிமேல் பஸ்சில் தொங்கிய படி பயணிக்க மாட்டோம் என்று எழுத சொல்லியும், ‘படியில் பயணம், நொடியில் மரணம், படியில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்’ என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஒரு மணி நேரம் சாலையில் பிடித்தபடி நிற்க சொல்லியும் நூதன தண்டனையை மாணவர்களுக்கு போலீசார் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *