வாழ்வியல்

அனைத்து புற்றுநோயையும் குணப்படுத்த புதிய முறை!–1

Spread the love

மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் ஓர் அங்கமாக இருக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பு மூலம், எல்லா வகையான புற்றுநோய்களையும் குணப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மார்பகம், நுரையீரல், புரோஸ்டேட் சுரப்பி மற்றும் உடலின் பிற பாகங்களில் உண்டாகும் புற்றுநோயை குணப்படுத்தும் முறை ஒன்றை கார்டிப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த முறை இன்னும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் சோதிக்கப்படவில்லை என்றாலும், இது புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் மிக்கது என்று ‘நேச்சர் இம்யூனாலஜி’ எனும் மருத்துவ பத்திரிகையில் வெளியாகியுள்ள இதன் முடிவுகள் கூறுகின்றன.

உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு, புற்றுநோயை உண்டாக்கும் அணுக்களைத் தாக்கும். மனித உடலுக்கு எதாவது தீங்கு ஏற்பட்டுள்ளதா என்று ஆராய்ந்து, அவ்வாறு ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால் அவற்றைத் தாக்கி அழிக்கும் உயிரணுக்கள் டி-உயிரணுக்கள் (T-Cells) எனப்படும்.

அனைத்து வகையான புற்று நோய்களையும் கண்டறிந்து அழிக்கும் ஒரு வகை டி-உயிரணுவைத்தான் இப்போது ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

“இது சாத்தியம் என்று யாரும் இதுவரை நினைக்கவில்லை. ஒரே வகையான டி-உயிரணு, அனைத்து வயதினருக்கும் உண்டாகும் அனைத்து வகையான புற்றுநோயையும் குணமாக்கும் வல்லமை பெற்றுள்ளது என்று, இந்த ஆய்வில் பங்கேற்ற பேராசிரியர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *