வாழ்வியல்

இதய தசைகள் மீது ஆய்வக திசுக்களை ஒட்டும் சிகிச்சை!

மாரடைப்பால் பலகீனமான இதயத் தசைகள் மீது, ஆய்வகத்தில் வளர்த்த திசுக்களை ஒட்டுப்போடும் சிகிச்சை முறையை டோக்கியோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இத்தகைய சிகிச்சை நடப்பது உலகிலேயே முதல் முறையாகும்.

மனித உடலில் உள்ள, ‘ஸ்டெம் செல்’ எனப்படும் தண்டு உயிரணுக்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. இத்திசுக்களை ஒரு வைரஸ் மூலம் தூண்டி, உடலின் எந்தப் பகுதிக்கும் பொருத்துவதற்கு ஏற்ற திசுக்களாக வளர்க்க முடியும். ஜப்பானுக்கு நோபல் பரிசை வாங்கித் தந்த இந்த உத்தியைத் தான். அண்மையில் ஒசாகா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கடைப்பிடித்துள்ளனர்.

ஆய்வகத்தில், செல்களுக்கு தேவையான சத்துக்களைக் கொண்ட சில உயிரித் தாள்களின் மீது வளர்க்கப்பட்ட பல கோடி செல்களை, நோயாளி இதயத்தின், பாதிக்கப்பட்ட தசைப் பகுதியில் வைத்து தைக்கப்பட்டன. ஜனவரி முதல் வாரத்தில் இந்த சிகிச்சை நடந்தது. தற்போது நோயாளி, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, ஜப்பான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும், 10 பேருக்கு ஜப்பானில் இதே போன்ற சிகிச்சைகளை செய்ய, ஒசாகா மருத்துவ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். பிறகு, இச்சிகிச்சை முறைப்படுத்தப்பட்டால், உலகெங்கும் உள்ள பல்லாயிரம் மாரடைப்பு நோயாளிகள் பயனடைவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *