வர்த்தகம்

நவீன வசதியுடன் லேப்டாப்கள்: ஆசஸ் இந்தியா அறிமுகம்

கோவை, செப். 25

தைவானை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு கணினி வன் பொருள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்தியப்பிரிவான ஆசஸ் இந்தியா, ஆசஸ் எக்ஸ்பர்ட்புக் மற்றும் ஆசஸ் எக்ஸ்பர்ட் சென்டர் பிராண்ட் குடையின் கீழ் இந்தியாவில் வணிக பிசி தயாரிப்புகளின் பரந்த போர்ட் போலியோவை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்த தொடக்கம் குறித்து ஆசஸ் இந்தியா மற்றும் தெற்காசியாவின் சிஸ்டம் பிசினஸ் குழுமத்தின் பிராந்திய இயக்குநர் லியோன் யூ கூறுகையில், எங்கள் எக்ஸ்பர்ட்புக் சீரிஸை இந்தியாவில் தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

எக்ஸ்பர்ட் சீரிஸ் மூலம், எங்கள் வணிக பிசிக்களின் அதி நவீன தொழில்நுட்பம், புதுமையான கண்டுபிடிப்பு மற்றும் இணையற்ற செயல்திறனை அனுபவிக்கும் வாய்ப்பை நிறுவனங்களுக்கு வழங்குகிறோம்.

பிசிக்களில் ஆசஸின் அதிநவீன தொழில்நுட்பத்தை வன்பொருள் அடிப்படையிலான குறியாக்கம் மற்றும் ராணுவத்தர ஆயுள் போன்ற வணிக பிசியின் தனித்துவமான அத்தியாவசியங்களுடன் இணைக்கும் ஆசஸ் எக்ஸ்பர்ட் சீரிஸின் கீழ் பலவகையான தயாரிப்புகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

ஆசஸ் எக்ஸ்பர்ட் சீரிஸ்களின் வணிக பிசிக்கள், நிறுவனம் மற்றும் வணிகங்களின் தொழில் முறை தரத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *