செய்திகள்

கம்மவார்பாளையத்தில் இளைஞர்கள் சேர்க்கை முகாம்; மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் படிவம் வழங்கினார்

கம்மவார்பாளையத்தில் இளைஞர்கள் சேர்க்கை முகாம்;

மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் படிவம் வழங்கினார்

அத்திவாக்கம் டாக்டர் செ.ரமேஷ் ஏற்பாடு

காஞ்சீபுரம், அக். 26 –

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க, காஞ்சீபுரம் அருகே கம்மவார்பாளையத்தில் ஒன்றிய கழக செயலாளர் அத்திவாக்கம் டாக்டர் செ.ரமேஷ் ஏற்பாட்டின் பேரில், கழக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு காஞ்சீபுரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலிதிருநாவுக்கரசு, மாவட்ட பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார்கள்

பிறகு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் பேசுகையில், நீங்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று கழக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, வருகிற 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க.வின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும். 2021ம் ஆண்டில் தமிழகத்தில் மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி மலரும் என்றார்.

இதில் முன்னாள் எம்.பி காஞ்சீ பன்னீர்செல்வம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், பொருளாளர் வீ.வள்ளிநாயகம், வர்த்தக பிரிவு செயலாளர் தென்னேரி என்.எம்.வரதராஜூலு, ஒன்றிய செயலாளர் அக்ரி கே.நாகராஜன், அம்மா பேரவை நிர்வாகி மார்க்கெட் வி.அரிக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேதாச்சலம், மாவட்ட பாசறை நிர்வாகி திலக்குமார், அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் ஒ.வி.ரவி, கரூர் மாணிக்கம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாலாஜாபாத் ஒன்றிய கழக செயலாளர் அத்திவாக்கம் டாக்டர் செ.ரமேஷ் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *