வர்த்தகம்

எல்ஐசி நிர்வாக இயக்குனராக சித்தார்த் மொகந்தி பதவி ஏற்றார்

சென்னை, பிப். 4-

எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிர்வாக இயக்குனராக உள்ள சித்தார்த் மொகந்தி எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பதவி ஏற்றார்.

நிர்வாகத்தில் உள்ள 4 நிர்வாக இயக்குனர்களில் ஒருவராக இவர் பொறுப்பேற்றார். இந்நிறுவனத்தில் 1985–ஆம் ஆண்டில் அதிகாரியாக பதவியேற்று, எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸில் சேர்வதற்கு முன்னால், இந்த நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் அதிகாரியாக (சட்டம்) பணிபுரிந்துள்ளார்.

இவர் 36 ஆண்டுகளாக மார்க்கெட்டிங், மனிதவள மேம்பாடு, முதலீடு மற்றும் சட்டத் துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் ஆவார். முதலீடு பிரிவில் தலைவராக செயல்பட்டு அனுபவம் கொண்டவர் ஆவார்.

இவரது நிர்வாகத்தில் இந்நிறுவனம் திறமையாக முதலீடு செய்து, கூடுதல் வருமானம் சம்பாதித்து, பாலிசிதாரர்களுக்கு கூடுதல் பலன் வழங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *