வாழ்வியல்

டிரைவர் இல்லாத தானியங்கி வாகனங்களுக்கு புதிய விதிகள்!

Spread the love

உலகெங்கும் வாகன விபத்துகளில் ஆண்டு தோறும், 13 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர், பல லட்சம் பேர் படுகாயம் அடைகின்றனர். இந்த விபத்துகளை அறவே தவிர்க்க, ‘அடானமஸ் கார்’ எனப்படும், தானியங்கி வாகனங்களை, ‘கூகுள்’ முதல், ‘வோக்ஸ்வேகன்’ வரை உருவாக்கி, சாலைகளில் வெள்ளோட்டம் நடத்தி வருகின்றன.

இந்த வெள்ளோட்டங்களில், இரண்டு உயிர்கள் பலியானதையடுத்து, தானோட்டி வாகனங்களை இயக்கும் செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களின் திறன் பற்றிய விமர்சனங்கள் வரத் துவங்கியுள்ளன. எனவே, ‘பென்ஸ்’ முதல், ‘உபேர்’ வரை, தானியங்கி வாகன தயாரிப்பாளர்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பு, ‘பாதுகாப்பை முதன்மையாகக் கொண்ட வெள்ளை அறிக்கையை தயார் செய்து வருகிறது.

இதேபோல, வேறு சில தானோட்டி வாகன அமைப்புகளும், தானோட்டிகளுக்கு சாலை விதிகளை வரையறை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்த முன்வரைவுகளில், மூன்று அடிப்படை அம்சங்கள் உள்ளன. முதலாவதாக, தானோட்டிக்கான செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள், அலட்சியமாக முரட்டுத்தனமாக வாகனத்தை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

இரண்டாவதாக, அவை, எல்லா தருணங்களிலும் மோதலை தவிர்க்க வேண்டும். மூன்றாவதாக, அவை திறமையான மனித ஓட்டுனருக்கு இணையாக அல்லது அதை விட மிகுந்த திறமையுடன் வாகனத்தை செலுத்த வேண்டும்.

தானோட்டி வாகனங்கள், 2022ம் ஆண்டில் விற்பனைக்கு வரக்கூடும் என்பதால், அதற்குள் அவை பாதுகாப்பானவை என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *