செய்திகள்

ஆடி இந்தியா நிறுவனத்தின் பாதுகாப்பு, மாசு கட்டுப்பாடு வசதிகளுடன் புதிய சொகுசு கார் அறிமுகம்

Spread the love

சென்னை, பிப். 7–

ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியா புதிய ஏ8எல் (A8 L) மாடல் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் பல்பீர் சிங் தில்லான் கூறுகையில், ஏ8எல் மாடல் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன பாதுகாப்பு, மாசு கட்டுப்பாடு வசதிகளை முதன்மையாகக் கொண்டு இப்புதிய காரை ஆடி நிறுவனம் வடிவமைத்துள்ளது என்றார்.

சுற்றுப்புறச் சூழலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு டீசல் கார்களை உருவாக்குவதில்லை என ஆடி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. எனவே பி.எஸ். 4 மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறையிலிருந்து பி.எஸ். 6-க்கு மாறும்போது எங்களது தயாரிப்புகள் அனைத்தும் பெட்ரோல் கார்களாகவே இருக்கும்.

இருப்பினும், டீசல் கார்களைப் பொருத்தவரையில் அவற்றை நாங்கள் முழுமையாக கைவிடவில்லை. அது குறித்து குறைந்தபட்சம் ஓராண்டாவது மதிப்பீடு செய்யவுள்ளோம். அதுவரையில் ஆடி நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் பெட்ரோல் பயன்பாட்டைக் கொண்டதாகவே மட்டும் இருக்கும்.

ஆடி நிறுவனத்தின் புதிய அறிமுகமான ஏ8 மாடல் 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினை உள்ளடக்கியுள்ளது. இது 340 குதிரைத் திறன் சக்தியை (எச்பி) கொண்டது. இதனால் 5.7 நொடிகளிலிலேயே சீறிப் பாயும்.

புதிய பரிமாண சேஸ், விசாலமான இடவசதி, சொகுசு இருக்கை ரிமோட், கூடுதல் பாதுகாப்புக்காக மேம்படுத்தப்பட்ட காற்றுப் பைகள் உள்ளிட்ட ஏராளமான அதிநவீன வசதிகளைக் உள்ளடக்கி வெளிவந்துள்ள ஏ8 எல் மாடலின் விலை ரூ. 1.56 கோடியிலிருந்து தொடங்குகிறது” என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *