செய்திகள்

நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் நாளை முதல் மீண்டும் எழும்பூரில் இருந்து புறப்படும்

Spread the love

சென்னை, டிச.3-

சென்னை எழும்பூர் ரெயில் நிலைய 4–வது நடைமேடையில் பராமரிப்பு பணி நடைபெற்று வந்ததால் நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த 2 ரெயில்களும் நாளை (புதன்கிழமை) முதல் சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* தாம்பரம் –நெல்லை இடையே இயக்கப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:12631) மற்றும் தாம்பரம் – செங்கோட்டை (12661) இடையே இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (புதன்கிழமை) முதல் எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

இதைபோல் நெல்லையில் இருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (12632), செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் (12662) நாளை முதல் எழும்பூர் வரை இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *