செய்திகள்

‘நீட்’ தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி

‘நீட்’ தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ஈரோடு, அக். 30

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இரண்டாவது முறையாக ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படும் என்று கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோபி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக பணியாற்றுகிறார். இந்தியாவே வியக்கும் வண்ணம் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை துவக்கி சிறப்பாக பணியாற்றுகிறார். இந்தாண்டு அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் 303 மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கான வாய்ப்பு உள்ளது.

2வது முறையாக பயிற்சி

மருத்துவக்கல்லூரி படிப்பதற்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு விரைவில் நிறைவேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார். இந்தாண்டு நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மீண்டும் இரண்டாவது முறையாக ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படும்.

இதுவரை பிளஸ் 2 முடித்த 9 ஆயிரத்து 438 மாணவ மாணவிகள் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளார்கள். இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

பேட்டியின் போது, மாவட்ட பால்வளத்தலைவர் கே.கேகாளியப்பன், கோபி ஒன்றியச் செயலாளர் சிறுவலூர் மனோகரன், நம்பியூர் ஒன்றியச் செயலாளர் தம்பி (எ) சுப்பிரமணியம், கோபி நகரச் செயலாளர் காளியப்பன், நகரத்துணைச் செயலாளர் ஜி.ஆர்.இளங்கோவன், மாவட்ட மாணவரணி முன்னாள் செயலாளர் பிரினியோ கணேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *