செய்திகள்

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய பணிகள்: உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுடன் ஆலோசனை

திருச்சி, அக்.17–

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் பணிகள் குறித்து இந்த ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவுடன் ஆலோசனை நடத்தினர்.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவை பெங்களூர் அலுவகத்தில் நேரில் சந்தித்து மாநிலத்தில் ஆணையம் சார்பில் மேற்கொண்டுவரும் திட்டங்கள் மற்றும் செய்துவரும் பணிகள் தொடர்பாக ஆலோசித்தார்.

மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆயிரக்கணக்கான குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தமைக்கு ஆர்.ஜி ஆனந்த்க்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பாராட்டி, மாநிலத்தில் ஆணையம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திற்கும் ஆதரவு அளித்து ஆணையத்திற்கு உறுதுணையாக கர்நாடக அரசு விளங்கும் என தெரிவித்தார்.

பின்னர் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் நேற்று மாலை பெங்களூர் மாநகர காவல் ஆணையர் கமல் சந்தித்து போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க பிரத்தியோக கட்டணமில்லா எண் 1908 அறிமுகப்படுத்திய பெங்களூர் மாநகர காவல் நிர்வாகத்திற்கும் மேலும் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஆணையத்தின் ஆலோசனைப்படி செயல்பட்டு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டதற்கு நன்றி தெரிவித்து வாழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *