வர்த்தகம்

நவ்னீத் குரூப் அதிகாரிகள் பயன்பாட்டுக்கு நவீன குறிப்பேடு அறிமுகம்

சென்னை, அக்.23–

நவ்னீத் குரூப் நிறுவனம், அதிகாரிகள் பயன்பாட்டுக்கு நவீன குறிப்பேடு அறிமுகம் செய்துள்ளது.

மாணவர்களுக்கான எழுது பொருட்கள் தயாரிப்புகளில் முன்னணியில் உள்ள நவ்னீத் எஜுகேஷன் நிறுவனம் அலுவலக எழுதுபொருட்கள் எச்கியூ பெயரில் வெளியிட்டுள்ளது. புதுமையான மற்றும் எளிமையான வடிவமைப்புகள், அற்புதமான தரம் மற்றும் வலுவான பயன்பாட்டு மதிப்பு ஆகியவற்றின் காரணமாக எச்கியூ எழுதுபொருள் தயாரிப்புகள் பிரபலமடைந்துள்ளன.

எச்கியூ குறிப்பேடுகள் நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு பிடித்தவையாக இருக்கும். இது ஈஸி டிஸ்க் நோட்புக் அறிமுகம் செய்துள்ளது. இந்த நோட் புக்கில் ஒருவர் பக்கங்களை மையடிஸ்க் பைண்டிங்கிலிருந்து எளிதாக அகற்றி, விரும்பிய இடங்களில் அவற்றை மீண்டும் செருகுவதன் மூலம் மாற்றங்களை மேற்கொள்ளலாம்.

இதேபோல், பியு நோட்புக்குகள், லீகலி 18, கேலிகிராஃபி கணேசா போன்ற தயாரிப்புகள் பலவிதமான வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. எச்கியூ அறிமுகம் குறித்து பேசிய தலைமை செயல்திட்ட அலுவலர் அபிஜித்சன் யால், “இந்த தயாரிப்புகளுக்கான பொருட்களை உருவாக்கி மேம்படுத்தும் போது நாங்கள் அதில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்கள் குறிப்பேடு புத்தகங்களின் ஸ்டைலான வடிவமைப்புகள் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த எழுத்து அனுபவத்திலும் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *