செய்திகள்

மேல்மருவத்தூரில் நவராத்திரி விழா: பங்காரு அடிகளார் அகண்ட தீபம் ஏற்றினார்

மேல்மருவத்தூர், அக். 17

மேல்மருவத்தூர் ஆதிபராசக்திசித்தர் பீடத்தில், பங்காரு அடிகளார் அகண்ட தீபத்தை ஏற்றி நவராத்திரி விழாவினை துவக்கி வைத்தார்.

சித்தர் பீடத்தில் அதிகாலை 2 மணிக்கு மங்கள இசையை தொடர்ந்து கருவறை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அம்மனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டிருந்தது.

காலை 9.15 மணிக்கு சித்தர் பீடம் வந்த பங்காரு அடிகளாருக்குமேளதாளம் முழங்க பாத பூஜையுடன் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்தனர். சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் கிருமிநாசினி வழங்கப்பட்டது.

பங்காரு அடிகளார் அம்மனுக்கு தீபராதனை செய்து கருவறையில் சுயம்பு அம்மனுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த அகண்ட தீபத்தை ஏற்றி வைத்தார். ஒரு கன்னிப் பெண்ணிடம் அகண்ட தீபத்தை கையில் கொடுத்தார். அக்கன்னிப்பெண் அகண்ட தீபத்தை ஏந்தியபடியும், 3 சிறுமிகள் அம்மன் அலங்காரத்திலும், உடன் ஒரு சிறுவனுமாக நிற்க வைத்து அகண்ட தீபத்திற்கு பல்வேறு வகையான நாட்டு காய்கறிகளைக் கொண்டு திருஷ்டிகள் கழிக்கப்பட்டது.

மதியம் 12.45மணிக்கு பங்காரு அடிகளார் அகண்ட தீபத்தில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றியதை தொடர்ந்து காத்திருந்த பக்தர்களும் அகண்ட தீபத்தில் எண்ணெய் விட்டு தீபஒளியை வழிபட்டனர்.

புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு அமாவாசை வேள்வியை அடிகளார் துவக்கி வைத்தார். தொடர்ந்து லட்ச்சார்ச்சனை பகல் 2 மணியளவில் துவங்கியது. லட்ச்சார்ச்சனைக்கு பெயர் பதிவு செய்தவர்களின் நட்சத்திரம் மற்றும் பெயர் சொல்லி சங்கல்பம் செய்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் 1008, 108 தமிழ் மந்திரங்கள் படித்திட லட்ச்சார்ச்சனை தொடங்கியது. அப்பொழுதுகருவறைஅம்மனுக்குகுங்குமஅர்ச்சனைநடைபெற்றது.

நவராத்திரி விழா இம்மாதம் 26ந் தேதிவரை வெவ்வேறு காப்புகள் மற்றும் சிறப்பு அலங்காரங்களுடன் நடைபெறும். இயக்கத் துணைத்தலைவர் சக்தி கோ.ப.செந்தில்குமாரின் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மற்றும் ஏனைய ஏற்பாடுகளும் ஸ்ரீதேவி ரமேஷின் மேற்பார்வையில் செய்யப்பட்டது.

விழா ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவர் லட்சுமிபங்காரு அடிகளார் தலைமையில் ஆன்மிக இயக்கத்தின் சென்னை மாவட்ட சாலிகிராமம் மற்றும் எண்ணூர் சக்தி பீடங்களும் மற்றும் மன்றங்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *