சென்னை, ஜன.22 –
30 ஆண்டுகளுக்கு மேலாக பெங்களூர் நகரில் தனது 15 உணவகங்களில் சுவை மிகுந்த ஆந்திர உணவு வகைகளை வழங்கிவரும் நந்தனா பேலஸ், ஏகாட்டூர் ஓ.எம்.ஆர் சாலையில் மெரினா மால் அருகே புதிய கிளை நிறுவி உள்ளது என்று அதன் தலைவர் ஆர். ரவீந்தர் தெரிவித்தார்.
புதிய ரெஸ்டாரண்டை அடையார் ஆனந்த பவன் கே.டி. வெங்கடேசன் மற்றும் கே.டி. ஸ்ரீனிவாச ராஜா, துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், நடிகை சுகாசினி மணிரத்னம், தயாரிப்பாளர் புஷ்பா கந்தசுவாமி குத்துவிளக்கு ஏற்றினர். சாமுண்டேஸ்வரி, ரமேஷ், சங்கீதா மொபைல்ஸ் சுபாஷ் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நந்தனா பேலஸ் ரெஸ்டாரண்ட், பாரம்பரிய ஆந்திர உணவு வகைகளை சுவையும் மனமும் மாறாது வழங்கிவருகிறது. ஆந்திர மாநிலத்தின் மிகப் பிரபலமான சிகப்பு மிளகாய், புளி, கோங்குரா மற்றும் ஆவக்காய், மாங்காய் சட்னி ஆகியவை இங்கு கிடைக்கும் என்றார் ஆர். ரவீந்தர்.
ஆந்திரா, ஐதராபாத், பல்வேறு உணவு வகைகள் மற்றும் பிரியாணி வகைகளை உலக தரம் வாய்த்த சூழலில் அறிமுகப்படுத்துவதன் மூலம் நந்தனா பேலஸ் தனி முத்திரை பதித்துள்ளது. நந்தனா பேலஸில் தனக்கே உரிய சிறப்பு உணவு வகைகளான சிக்கன் அமராவதி, சிக்கன் குண்டூர் மற்றும் ஃபிஷ் அப்போலோ ஆகியவற்றை சென்னைக்கு கொண்டு வந்துள்ளது. மேலும், அனைவருக்கும் பிடித்த சிக்கன் சத்ரியா, ஷோலே கெபாப், பாம்பூ சிக்கன், கேரட் 65, காளான் நெய் ரோஸ்ட்,பேபி கான் புதினா ஆகிய உணவு வகைகளும் வழங்குகிறது என்றார் அவர்.