சினிமா

‘நானும் சிங்கிள் தான்’: நயன்தாரா – விக்னேஷ்சிவன் காதலை படமாக எடுக்கும் இளம் இயக்குனர் கோபி!

Spread the love

‘‘சிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் கேட்சிங்கானது. அதன் அடிப்படையிலே ” நானும் சிங்கிள் தான் ” என்ற டைட்டிலோடு களம் இறங்கி இருக்கிறோம். டைட்டில் போலவே கண்டெண்டிலும் தனிக் கவனம் செலுத்தி இருக்கிறோம்.

தமிழ்சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிகப்பிரபலம். அந்தக்காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி.பலர் ஆசீர்வதிக்கும் ஜோடியாக இருந்தாலும் இப்போது வரை சிலரால் ஆச்சர்யமாக பார்க்கும் ஜோடியும் கூட.

இந்த படத்தின் ஹீரோவின் லட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான். தமிழ்சினிமாவில் பெரிதாக கல்லா கட்டிய படமான அஜித்தின் பில்லா படத்தில் நயன்தாரா டாட்டூ குத்தி இருப்பார். அந்த டாட்டூ குத்திய நபராக இப்படத்தின் ஹீரோ வருகிறார்.

நயனுக்கு டாட்டூ குத்திய ஹீரோ தன் ஹார்ட்டைப் பறிகொடுக்க காதல் பேய்ப் பிடித்து திரிவது தான் கதை. இதற்குள் நயன் விக்னேஷ் சிவன் காதல் சமாச்சாரமும் இருக்கும் என்கிறார் இயக்குனர் கோபி. ஆக முரட்டு சிங்கள்ஸ் முதற்கொண்டு எல்லா சிங்கிஸுக்கு இப்படம் செம்ம எண்டெர்டெயின்மெண்ட் ஆக இருக்கும் என்கிறார்கள்.படம் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது’ என்று முன்னோட்டம் விட்டார் படத்தின் இயக்குனர் கோபி.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – கோபி.

‘தேர் ஈஸ் எ கம்பெனி’ என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “ நானும் சிங்கிள் தான் “. தினேஷ் கதாநாயகன். கதாநாயகியாக தீப்தி திவேஸ், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – டேவிட் ஆனந்த்ராஜ், இசை – ஹித்தேஷ் மஞ்சுநாத் ( இவர் ஏ.ஆர்.ரகுமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்), பாடல்கள் – கபிலன் வைரமுத்து, ஸ்டன்ட் – கனல் கண்ணன், கலை – ஆண்டனி ஜோசப்,

எடிட்டிங் – ஆதித்யன், நடனம் – அபீப் உஷேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *