நாடும் நடப்பும்

சீன சதி வலையில் மியான்மர் ராணுவம்

ஒரு வழியாக அமெரிக்க அரசியல் போர் ஓய்வு பெற மியான்மரில் உள்நாட்டு அரசியல் யுத்தம் துவங்கி விட்டது!

கடந்த ஆண்டு இறுதியில் மியான்மரில் அந்நாட்டு ஜனநாயக முறைப்படி விசித்திரமான தேர்தல் நடந்து முடிந்தது. 25 சதவிகித தொகுதிகளில் ராணுவ கட்டுப்பாட்டில் அவர்களே யாரையேனும் நியமித்துக் கொள்ளலாம்.

மீதி 75 சதவிகித இடங்களுக்கே தேர்தல்! அதிலும் உலகமே பாராட்டும் ஆங் சான் சூ ச்சீ மிகப்பெரிய வெற்றி பெற்றார்.

ஆனால் எதிர்கட்சிகள், ஆம், ராணுவத்தினர் ஆங் சான் சூ ச்சீ சூழ்ச்சி செய்து வென்றதாக குற்றம் சாட்டி அவ்வெற்றி செல்லாது என்று அறிவித்துவிட்டு அவரை தேர்தல் குற்றங்களுக்காக சிறைபிடித்தும் விட்டனர்!

இந்த நிலையில் மியான்மர் அரசியல் நெருக்கடிக்கு எதிராக பரவலாக போராட்டங்கள் காணப்படா விட்டாலும் மருத்துவத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து ராணுவ நடவடிக்கைக்கு எதிரான தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.

ஆங் சான் சூ ச்சீ சார்ந்த ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி (என்எல்டி), அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறது.

கடந்த நவம்பர் நடந்து முடிந்த தேர்தலில் அவரது கட்சி மோசடி செய்து வெற்றி பெற்றதாக ராணுவ தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் 80 சதவீதத்துக்கும் அதிகமாக பதிவான தங்களுடைய வெற்றியை ராணுவத்தினர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று என்எல்டி கட்சி தெரிவித்துள்ளது.

முன்னதாக நாட்டின் நிர்வாகப் பொறுப்பை தாங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாக மியான்மர் ராணுவம் அறிவித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டு ஒரு தசாப்தம் கழித்து இது மீண்டும் நடந்திருக்கிறது.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை நாட்டில் அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. 2011-ல் ஜனநாயக ஆட்சி அமைவதற்கு முன்பு, சுமார் 50 ஆண்டு காலம் ராணுவத்தின் சர்வாதிகார ஆட்சியை சந்தித்த நாடு மியான்மர். அதிகாலை நேரத்தில் ஆங் சான் சூச்சி மற்றும் பிற அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பாணி, தாங்கள் மறந்துவிட்ட அதே ராணுவ பாணியை நினைவுபடுத்துவதாக அந்த மக்களுக்கு இருந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக சூச்சீ மற்றும் ஒரு காலத்தில் தடை செய்யப்பட்டிருந்த அவருடைய ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி (என்.எல்.டி.) ஆட்சி நடத்தி வந்தது.

25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுதந்திரமாக, நேர்மையாக 2015–ல் நடந்த தேர்தலில் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்திருந்தது. கடந்த திங்கள்கிழமை காலையில், அந்தக் கட்சியின் இரண்டாவது பதவிக் காலம் தொடங்கி இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் கால்வாசி இடங்கள் ராணுவத்தின் வசம் இருக்கும் வகையிலும் மிக முக்கியமான அமைச்சகங்கள் ராணுவத்தின் வசம் இருக்கும் வகையிலும் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் காரணமாக மியான்மர் நிர்வாகத்தில் ராணுவம் தான் திரைமறைவில் கட்டுப்பாட்டை செலுத்தி வந்தது.

இந்த நிலையில் இப்போது ஏன் ஆட்சிக் கவிழ்ப்பு செய்யப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. மிக முக்கியமாக அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் முடிந்த உடனேயே தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ராணுவத்தின் ஆதரவைப் பெற்ற எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியது. புதிதாக பதவியேற்ற தற்காலிக தலைவர் கையெழுத்திட்ட அறிக்கையிலும் இந்த குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது. ஓராண்டு கால நெருக்கடி நிலை பிரகடனம் சரியானது என்று நியாயப்படுத்தும் வகையில் இந்த அறிக்கை உள்ளது.

இப்போது அறிவித்துள்ளபடி ஓராண்டு காலத்துக்கு அதிகாரத்தைப் பறித்துக் கொள்வதால் சீனா அல்லாத சர்வதேச பங்காளர்கள், ராணுவத்தின் வணிக நலன்களுக்கு ஊறு ஏற்படுத்தி, சூச்சீ மற்றும் என்.எல்.டி. கட்சியை இன்னொரு பதவிக்காலத்துக்கு ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்த பல மில்லியன் மக்களின் எதிர்ப்பை அதிகரிக்கச் செய்வதாக இருக்கும்’.

ஆங் சான் சூச்சீ பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கிறார்” என்று ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் துணை இயக்குநர் கூறியுள்ளார்.

“வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாகப் புகார்கள் கூறப்படுகின்றன. இது டிரம்ப் புகார்களைப் போல உள்ளது. – எந்த ஆதாரங்களும் இல்லாமல் இந்தப் புகார்கள் கூறப்படுகின்றன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராணுவ அரசின் குறிக்கோள் ஜனநாயகத்தை முறியடிப்பதுடன் சீனாவுடன் நல்லுறவும் வர்த்தக உறவும் நிலைக்க வேண்டும் என்பதற்காக என்று உலக தலைவர்கள் கூறி வருவதை பார்க்கிறோம்.

இந்தியாவிற்கு தலைவலியாக இருக்கும் சீனா இப்படி மியான்மரிலும் துவங்கி இருக்கும் அரசியல் குழப்பம் இப்பகுதியில் அமைதிக்கு குந்தகமாக மாறிவருகிறது. ஐ.நா.வும் இதை கண்டித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *