வாழ்வியல்

காய்கறி, பழங்களை விடவும் அதிக சத்து நிறைந்த காளான்!

Spread the love

காளான், மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான், பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது. இயற்கையாக வளரும் காளானில் பல நன்மைகள் உள்ளன.

* புரதச்சத்தும், உடலுக்கு வேண்டிய ஆற்றலையும் தரும்.

* சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், மலச்சிக்கல், வளரும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி ஆகியவற்றுக்கு காளான் சிறந்த உணவாகும்.

* முதியோர்களுக்கு எளிதில் செரிமான ஆற்றலைத் தரும்.

* இரும்புச்சத்து மற்றும் இதில் எட்டு வகை அமினோ அமிலங்கள் உள்ளன.

* வயிற்றுப்புண், ஆசனப்புண் ஆகியவை குணமாக காளானை முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி ஆகியவற்றுடன் பொரியலாகவும், பிரியாணியாகவும் செய்து சாப்பிடலாம்.

* இதில் ஆரஞ்சைவிட 4 மடங்கும், ஆப்பிளைவிட 12 மடங்கும், முட்டைக்கோஸை விட இரு மடங்கும் புரதச்சத்தும் மற்றும் மருத்துவ குணங்களும் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *